Show all

வட மாநிலங்களில் பாஜகவின் ஹிந்துத்துவா விதைப்புகளை, தனித்து அறுவடைசெய்ய சிவசேனா ஆயத்தம்

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலமாக இருக்கும் கட்சி சிவசேனா. தற்போது மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் சிவசேனாவுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. பா.ஜ.க. மற்றும் அதன் செயல்பாடுகளை சிவசேனா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்திலும் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனாலும், இரு கட்சிகளின் தலைமைக்கும் இடையே பெரிய நெருக்கம் இல்லை.

கூட்டணியில் இருந்தாலும் பா.ஜ.க. மீது தொடர்ந்து விமர்சித்து வந்த சிவசேனா, கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவ்வப்போது தகவல் வெளியானது. மகாராஷ்டிர மாநிலத்தில் கூட்டணியை முறித்துக்கொள்ள சஞ்சய் ராவத் பாராளுமன்றஉறுப்பினர்கள் போன்ற சில தலைவர்கள் விரும்பினாலும், குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்கும் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் தனித்துப்போட்டியிட உள்ளதாக சிவ சேனா அதிரடியாக அறிவித்துள்ளது.

சிவ சேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. அப்போது, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் சிவ சேனா கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் யுவ சேனா தலைவர் ஆதித்ய தாக்கரேவை சிவ சேனாவின் தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவ சேனாவின் தேசிய செயற்குழுவில் மூத்த தலைவர்களான மனோகர் ஜோஷி, சுதிர் ஜோஷி, சுபாஷ் தேசாய், திவாகல் ரவோட் மற்றும் 4 தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தலைவர்களுடன் இளம் வயது தலைவரான ஆதித்ய தாக்கரேவும் தேசிய செயற்குழுவில் இடம்பெறுகிறார்.

தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஹிந்துத்துவா கொள்கைகளை முன்னிறுத்தி ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவோம் என்றும் அதற்காக இன்று சபதம் எடுத்திருப்பதாகவும் கூறினார்.

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்றவாறு, மதவாதம் இரண்டு பட்டால் நட்டுக்கு நல்லது தான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,676

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.