Show all

அருண் ஜெட்லிக்கு சானிடரி நாப்கினை சிப்பஅஞ்சல் அனுப்பியுள்ள கேரள மாணவிகள்

பெண்கள் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கினுக்கு 12விழுக்காடு சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

     சரக்கு சேவை வரி விதிப்புக்கு முன் ரூ.3.33 வரை ஒரு நாப்கின் உற்பத்தி செய்ய செலவாகியுள்ளது. ஆனால் சரக்கு சேவை வரிக்குப் பின் ஒரு நாப்கின் தயாரிக்க ரூ.8 வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

     சானிடரி நாப்கினுக்கு 12விழுக்காட சரக்கு சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெண்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

     சரக்கு சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள இடதுசாரி மாணவர் அமைப்பினர் கல்லூரி வளாகங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     போராட்டத்தின் ஒருபகுதியாக நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சானிடரி நாப்கினை சிப்பஅஞ்சல் அனுப்பியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.