Show all

நெதர்லாந்தில் வாடகைக்கு விடப்படும் சிறைச்சாலைகள்

கைதிகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் சிறைகளை மற்ற நாடுகளுக்கு நெதர்லாந்து அரசு வாடகைக்கு விட்டுள்ளது.

     நெதர்லாந்து நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இதனால் அங்கு உள்ள சிறைச்சாலைகள் யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இதனால் சிறை வளாகத்தை பல்வேறு பணிகளுக்கு நெதர்லாந்து அரசு பயன்படுத்தி வருகின்றது. அதன்படி முன்னாள் பெண்கள் சிறைச்சாலை ஒன்று தற்போது உணவகமாக செயல்படுகின்றது.

     அந்நாட்டில் உள்ள பிரேடா சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 90 அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

     2014-ம் ஆண்டு குற்றங்கள் பெருமளவு குறைந்து குற்றவாளிகள் இல்லாத காரணத்தால் 27 சிறைச்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 

     ஒரு சிறைச்சாலையை நார்வே கைதிகளை அடைப்பதற்காக நெதர்லாந்து வாடகைக்கு விட்டுள்ளது. 6 சிறைச்சாலைகள் 17 கோடி ரூபாய்க்கு விற்கவும் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.