22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கைபர் போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு, தமிழ்தொடர்ஆண்டு-1600 வாக்கில் (கிமு.1500- கிமு.500) வடபுலத் தமிழர் வாழ்ந்த வட நாவலந்தேயப் பகுதியை (உலகினர் இந்தேயா என்று உச்சரித்தனர்.) ஆரியர்கள் வந்தடைந்தனர்.

தமிழர்கள் அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வேளாண் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

ஆரியர்கள்-

அங்கு வாழ்ந்திருந்த தமிழர்களின் வாழ்க்கை முறைகளைத் தெரிந்து கொள்ளவோ கண்டு கொள்ளவோ முயலவேயில்லை. மாறாக தங்கள் எதிரிகளாகவே கருதினர்.

நடுஇரவில் கூட்டமாக வந்து தமிழர்களின் அணைக் கட்டுகளைத் தகர்த்தார்கள்.

இந்த அதேவர்கள் நீரை மாட்டைத் தொழுவத்தில் அடைப்பதைப் போல அடைத்து வைத்திருக்கிறார்களேஎன்று ஆரியர்கள் தங்கள் வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆரியர்கள்-

நீரை அதன் போக்கில் விட்டால் தானே ஆடுமாடுகளுக்கான புல் பூண்டுகள் வளரமுடியும் என்று கருதியே அணைகளைத் தகர்க்கிறார்கள்.

இதையேதான் கடந்த ஓராண்டாக மோடி அரசும் இந்திய மண்ணில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாழ்வதற்காக பெண்களின் அஞ்சறைப் பெட்டி சேமிப்புகளையும், எளிய மக்களின் தொழில் பொருளாதார நிலைகளையும் அடித்து நொருக்கியிருக்கிறது.

அன்றைக்கு இந்தியா! வௌ;ளையர் காலம் வரை, மாய மந்திர பொய்க்கதைளைப் பேசிக் கொண்டு தாழ்ந்து கொண்டே வந்தது. இடையே துருக்கியர் வந்த போது, இருந்த கொஞ்ச நஞ்ச சொத்துக்களையும் களவாடிச் சென்றனர்.

மோடி அரசை அப்புறப் படுத்த விட்டால் நாளை இந்தியா மீண்டும் அடிமைகளின் இந்தியாவாக மாறும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,600

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.