Show all

இணையக் களவாணிகளால் ஆபத்து! ஆதார் குறித்து தொடரும் எச்சரிக்கைகளில் அடுத்து வருவது

28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆதார் இணையதளத்தின் அடிப்படை பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளதாக ஆஸ்திரேலிய நாட்டின் தகவல் பாதுகாப்பு அமைப்பான டிராய் ஹன்ட் எச்சரித்துள்ளது. ஆதார் இணையதள பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக டிராய் ஹன்ட் தனது வலைதள பக்கத்தில் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளது.

இந்தியாவின் ஆதார் முறை உண்மையில் பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை என குறிப்பிட்டுள்ளது. எங்கிருந்து யார் வேண்டுமானாலும் அதில் உள்ள தகவல்களை இயக்கும் வகையில் தான் ஆதார் இணையதள பாதுகாப்பு உள்ளது என கூறியுள்ளது.

மேலும் அதில், இந்தியாவின் ஆதார் கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அதன் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும், மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது என டிராய் ஹன்ட் தெரிவித்துள்ளது. இணையக் களவாணிகள் இத்தகைய குறைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினால் அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்றும் வினவியுள்ளது. இணையக் களவாணிகள் நினைத்தால் ஆதார் தகவல்களை எளிதாக எடுத்து விட முடியும். எனவே ஆதார் இணையதள தகவல்களை பாதுகாக்க இந்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,665

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.