Show all

ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்! டெல்லி சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதை திரும்பப்பெற டெல்லி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் கருத்துப் பரப்பதலுக்கு வந்த ராஜீவ் காந்தி, திருப்பெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்தார் என்று ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் நாட்டின் மிகமிக உயரிய 'பாரத ரத்னா' விருது அவருக்கு கடந்த ஆண்டில் அளிக்கப்பட்டது.

இந்த விருதினை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் காந்தியின் தாயார் இந்திராகாந்தி, டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

டெல்லியில் சுமார் 25அகவை மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி காவல்துறையினர் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் அறங்கூற்றுமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு அறங்கூற்றுவர் அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற அஞசல் அலுவலக பொறுப்பாளர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

முன்னர் இந்தக் கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு அண்மையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வன்முறைகளில் மறைந்த முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதை திரும்பப்பெற டெல்லி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,008.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.