Show all

திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஜியோனி நிறுவனம்! 20,3,00,00,00,000 டாலர் கடனில் சிக்கியதால்

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனாவின் மிடுக்குப்பேசி நிறுவனமான ஜியோனி நிறுவனம் திவாலானதாக சென்சென் அறங்கூற்றுமன்றம் அறிவித்துள்ளது. 

சீனாவின் மிடுக்குப்பேசி நிறுவனமான ஜியோனி நிறுவனம் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. இந்நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்;கு முன்பே சரிவை சந்திக்க தொடங்கியது. நடப்பு நிதி ஆண்டில் நிறுவனத்தின் கடன் தொகை 20,3,00,00,00,000 டாலராக அதிகரித்தது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் தலைவரான லியு லிரோங் சூதாட்டத்தில் ஆயிரம் கோடியை இழந்து விட்டதாகவும் எனவே அந்நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்குமாறும் சென்சென் அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்யப்பட்டது. இதனை விசாரித்த அறங்கூற்றுமன்றம் ஜியோனி நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜியோனி நிறுவன தலைவர் லியு லிரோங் கூறியதாவது: சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தது உண்மை என்றும் ஆனால் நிறுவனத்தின் பணத்தை சூதாட்டத்திற்கு பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் சூதாட்டத்தில் 1,44,00,000 டாலர்களை மட்டுமே இழந்தேன். ஜியோனி 290 கோடி டாலர்களை 648 சிறு நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையாக வழங்க வேண்டி இருந்தது. இந்நிறுவனத்திற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே  சுமார் 1.44 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் இந்த இழப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. 

ஜியோனி நிறுவனம் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு சென்சென், குவாங்டாங்கில் தொடங்கப்பட்டது. பிறகு இந்தியா, தைவான், வங்கதேசம், நைஜீரியா, வியட்நாம், மியான்மர், நேபாளம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் அல்ஜீரியா போன்ற நாடுகளில் வியாபாரத்தை நீட்டித்தது என்று தற்போதைய நிலை வரை நிலவரத்தைத் தெரிவித்தார்.

பாவம்! கைத்தூக்கி விட அந்த நிறுவனத்திற்கு ஒரு மோடி கிடைக்க வில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,008.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.