Show all

கேரளாவில் மழை நின்றது! அனுதாப தளத்தில் இருந்து ஆய்வுத் தளத்தை நோக்கி நகர்கிறார்கள்; பாதிப்புக்கு நகரமயமாக்கல் காரணமாம்

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்திற்கு பருவநிலை மாற்றமும் நகரமயமாக்கலும்தான் காரணம் என்று முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டியளித்துள்ளார். 

இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவிற்கு கேரளாவில் பெரிய மழை பெய்துள்ளது. இதனால் அங்கே பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கேரளா வெள்ளத்திற்கு இதுவரை 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் கேரளா வெள்ளம் குறித்து முன்னாள் சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் பேட்டியளித்துள்ளார். அதில்: கடைசியாக கேரளாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தது. அப்போது 26 விழுக்காடு அதிகம் பெய்தது. 

இந்த முறை கேரளாவில் தென்மேற்கு பருவமழை 30 விழுக்காடு அதிகம் பெய்துள்ளது. 10 சென்டிமீட்டர் பெய்ய வேண்டிய இடத்தில் 35 சென்டிமீட்டர் பெய்துள்ளது. முதன்மையாக கடந்த எட்;டு நாட்களாக அதிக மழை பெய்துள்ளது. கேரளவில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்தது வெள்ளத்திற்கு ஒரு காரணம் ஆகும். 

அதேபோல் நகரமாயமாக்கள் வெள்ளத்திற்கு முதன்மைக் காரணம் ஆகும். இதேபோல் அதிக மழை பெய்தால் மற்ற மாநிலத்திற்கும் வெள்ளம் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் 53 விழுக்காடு அதிகமாக இயல்பை விட மழை கூடுதலாக பெய்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்போ 79 விழுக்காடு அதிகம் சென்னையில் இயல்பைவிட மழை பெய்தது. அப்போது அதுதான் வெள்ளத்திற்கு காரணமாகும். ஆனால் கேரளாவில் மழை மட்டுமில்லாமல் நகரம்மயமாக்கலும் பெரிய காரணம் என்று கூறியுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,884.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.