Show all

ராகுல் காந்தி, வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் இந்தியா திரும்பினார்.

தாம் வெளியூர் சென்றிருந்தபோது நடந்த அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதற்காக, காங்கிரஸ் கட்சித் தலைவர்களை அவர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார்.

முன்னதாக, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதாக, கடந்த 28-ஆம் தேதி சுட்டுரை (டுவிட்டர்) இணையதளப் பக்கத்தில் தெரிவித்துவிட்டு, ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருந்தார்.

இதற்கு முன்பு அவர், இரு முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தபோதும் பல்வேறு யூகங்கள் எழுந்தன. கடந்த ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த பிறகு, 2 மாதங்கள் ஓய்வெடுப்பதாகக் கூறி வெளிநாடு சென்றிருந்த ராகுல் காந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி இந்தியா திரும்பினார்.

அவரது பயணத்தை பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன. இதேபோல், மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவுக்கு அவர் கடந்த செப்டம்பர் மாதம் சென்றபோதும், அவரது பயணத்தை அரசியல் கட்சிகள் விமர்சித்தன.

இதையடுத்து, அந்த மாநாட்டில் பங்கேற்பது போன்ற புகைப்படங்களை ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.