Show all

இராகுல் நெத்தியடி! தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல், தமிழக மக்களையும் கட்டுப்படுத்த நினைத்தால் அது நடக்காது

தமிழகத்தில் உள்ள ஆட்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். தமிழக அரசை கட்டுப்படுத்துவன் மூலம் தமிழர்களை கட்டுப்படுத்தலாம் என பாஜக நினைப்பது நடக்காது என்று கொங்கு மண்டல பரப்புரை மேடையில் இராகுல் பேசினார்.

11,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் இராகுல், ‘தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக ஒன்றிய ஆட்சி இல்லை. தமிழகத்தில் உள்ள ஆட்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். தமிழக அரசை கட்டுப்படுத்துவன் மூலம் தமிழர்களை கட்டுப்படுத்தலாம் என அவர்கள் நினைப்பது நடக்காது. 

தமிழ் உணர்வு மூலமாக மட்டுமே தமிழர்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை தமிழகத்தின் வரலாற்றைப் படித்தால்தான் புரியும். தமிழக மக்கள் என் பாட்டியான இந்திரா காந்தி மீது அளவில்லா அன்பு காட்டினர். தமிழக மக்களுடன் எனக்கு இருப்பது அரசியல் உறவு அல்ல. தமிழக மக்களுடன் எனக்கு குடும்ப உறவு உள்ளது. தமிழக மக்களின் சிக்கல்களைக் கேட்க வந்துள்ளேன். எனது கருத்துகளைக் கூற நான் இங்கு வரவில்லை, நீங்கள் கூறுவதைக் கேட்க உங்கள் சிக்கல்களை அறிய வந்துள்ளேன். தமிழ்நாட்டின் வரலாறு, மக்கள், தமிழ் மொழியில் இருந்து நாட்டின் இதர மாநிலங்கள் கற்றுக் கொள்ள ஏராளமாக உள்ளன என்பதை நான் அறிந்திருக்கிறேன். என்று தமிழக மக்களோடு தனக்கு இருக்கிற உறவையும், தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடப்பாடு குறித்தும் தான் தெளிவாகவே அறிய விரும்புவதாக  இராகுல் தன் பரப்புரையில் தமிழக மக்களிடம் கேட்டுக் கொண்டார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.