Show all

ஒருகிளையில் ரூ.11,500 கோடிக்கு மோசடி பண பரிவர்த்தனை என்று, பஞ்சாப் நேஷனல் வங்கி, சுயஅவதூறு

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மும்பையில் உள்ள தங்களது ஒரு கிளையில் மட்டும் மோசடி மற்றும் முறையற்ற கணக்கு என்ற வகையில் ரூ. 11,500 கோடிக்கு பண பரிவர்த்தனை நடந்து இருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி. சொத்து மதிப்பு அடிப்படையில் நான்காவது பெரிய வங்கி. இந்த வங்கியின் மும்பை கிளை ஒன்றில் மட்டும் ரூ.11,500 கோடி மதிப்பிலான சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதை அந்த வங்கி கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளது.

ஆனால், யார் இந்தப் பரிவர்த்தனையை மேற்கொண்டனர் என்ற விவரத்தை வங்கி வெளியிடவில்லை. அதுகுறித்த தகவல்களை சட்ட அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

மோசடி கணக்குகள் என்றால் என்ன? வங்கியை அது எப்படி பாதிக்கும் என்ற விவரத்தை வங்கி வெளியிடவில்லை. ஆனால், இந்த வங்கிக் கணக்குகள் குறித்து சரியான தகவல்கள் இருக்கும் பட்சத்தில், அதுகுறித்து வங்கி பரிசீலிக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

எதற்கு இந்த சுய அவதூறு என்பது குறித்து தெளிவான விளக்கம் வங்கி சார்பிலிருந்து தெரிவிக்கப் படவில்லை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,698

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.