Show all

இந்தப் பணக்காரர்களால் தொழில் செய்தே, வரிவாங்காமல், நாட்டின் அரசாட்சி நடத்தமுடியும் போல

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு நாட்டின் முதல் கோடிசுவரரிடம் இருக்கும் சொத்துக்களை வைத்து எத்தனை நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும் என்று ப்ளும்பெர்க் ஒரு ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையைப் பார்த்தால், மக்களிடம் வரிவாங்காமலேயே தொழில் செய்தே ஒவ்வொரு நாடும் அரசாட்சி நடத்தலாம் போல இருக்கிறதே. அப்புறம் இந்தியாவை ஆளுகிற அரசியல் வாதிகள், இந்தியாவைக் கடனில் வைத்திருக்கிறார்கள்.

இந்த அறிக்கை 49 நாடுகளின் அரசியல் சூழல் செலவுகள் மற்றும் அங்குள்ள கோடிசுவரர்களின் சொத்து மதிப்பு போன்றவற்றை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

சீன அரசின் அன்றாடச் செலவு என்பது 11,205.20 மில்லியன் டாலர். ஜிடிபி 13,118.70 பில்லியன். அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஒரு சீன கோடிசுவரர்

இவருடைய சொத்து மதிப்பு 45.5 பில்லியன் டாலர்கள். இதனை வைத்து ஜாக் மாவால் சீனாவில் 4 நாட்கள் வரை ஆட்சி புரிய முடியும்.

உலகின் மிகப் பெரிய கோடீசுவரர் என்ற பெருமையினைப் பில்கேட்ஸ் இடம் இருந்து தட்டிப்பறித்த அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பிஸோஸ் தனது 99 பில்லியன் டாலர் சொத்துக்களை வைத்து 5 நாட்கள் வரை அமெரிக்காவை ஆட்சி செய்ய முடியும். அமெரிக்க அரசின் ஒரு நாள் செலவு 19,642.10 மில்லியன் டாலர். ஜிடிபி 20,200.00 பில்லியன் டாலர் ஆகும்.

ஜெர்மனியைச் சேர்ந்த டீட்டர் ஷ்வார்ட்ஸ் சூப்பர் மார்கெட் மற்றும் ஹைப்பர் மார்கெட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். உலகின் மிகப் பெரிய கோடீசுவரர் ஆன டீட்டர் ஷ்வார்ட்ஸ் சொத்து மதிப்பு 24.3 பில்லியன் டாலர் ஆகும். ஜெர்மனி அரசின் ஒரு நாள் செலவு 4,507.90 மில்லியன் டாலர், ஜிடிபி 3,934.80 பில்லியன் டாலர். டீட்டர் ஷ்வார்ட்ஸ் ஜெர்மனியை 5 நாட்கள் வரை ஆட்சி செய்யலாம்.

ஸ்பெயின் நாட்டு கோடீசுவரர் ஆன அமானியோ ஒர்டேகா ஆடை அணிகலன் ரீடெயில் நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு 75.3 பில்லியன் டாலர். ஸ்பெயின் அரசின் ஒரு நாள் செலவு 1,583.60 மில்லியன் டாலர், ஜிடிபி 1,419.90 பில்லியன் டாலர். இவரால் ஸ்பெயினை 48 நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும்.

ஹாங் காங்கின் மிகப் பெரிய கோடீடசுவரர் லி கா-ஷிங் முதலீட்டு நிறுவனத்தினை நிர்வகித்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு 34.7 பில்லியன் டாலர். ஹாங் காங் அரசின் ஒரு நாள் செலவு 181.5 மில்லியன் டாலர், ஜிடிபி 344.8 பில்லியன் டாலர். லி கா-ஷிங் ஹாங் காங்கினை 191 நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும்.

சைப்ரஸ் நாட்டு கோடிசுவரர் ஆன ஜான் ஃப்ரெட்ரிக்ஸ் ஷிப்பிங், மீன் பிடி நிறுவனம் போன்றவற்றை நிர்வகித்து வருகிறார். இவரால் தனது நாட்டினை அதிகபட்சமாக 441 நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும். இவரது சொத்து மதிப்பு 10.4 பில்லியன் டாலர் ஆகும். சைப்ரஸ் அரசின் ஒரு நாள் செலவு 23.6 மில்லியன் டாலர், ஜிடிபி 23 பில்லியன் டாலர் ஆகும்.

கடைசியாக நம்மஆள், மோடியின் நண்பர், முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவரான முகேஷ் அம்பனியின் சொத்து மதிப்பு 40.3 பில்லியன் டாலர். இந்திய அரசின் ஒரு நாள் செலவு 1,987.20 மில்லியன் டாலர், ஜிடிபி 2,644.20 பில்லியன் டாலர். முகேஷ் அம்பானியால் இந்தியாவினை அதிகபட்சமாக 20 நாட்கள் வரை தனது சொத்துக்களை வைத்து செலவுகளை கவனித்துக்கொள்ள முடியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,698

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.