Show all

பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விற்பனை செய்த தொடர் வண்டி நிலையம்

பிரதமர் நரேந்திர மோடி தேநீர் விற்பனை செய்த தொடர் வண்டி நிலையம் எட்டு கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தப்பட உள்ளது.

குஜராத் மாநிலம், மேக்சானா மாவட்டத்தில் உள்ளது வாத்நகர் தொடர் வண்டி நிலையம்;. இங்குள்ள தேநீர் கடையில், தன் சிறு வயதில் தந்தையுடன் தேநீர் விற்பனை செய்து வந்ததாக, 2014 பாராளுமன்றத் தேர்தல் கருத்துப் பரப்புதலின் போது, பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிட்டார். இந்த தொடர் வண்டி நிலையம்

தற்போது மேம்படுத்தப்பட உள்ளதாக, தொடர் வண்டி

துறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா கூறியுள்ளார்.

     தேநீர் விற்பனை செய்து எளிய வாழ்க்கை வாழ்ந்த மோடி இன்று இந்தேயாவின் பிரதமராக, அவர் சுற்றாத நாடுகளின் பட்டியலைத் தயாரிப்பது எளிதானதல்ல என்கிற அளவுக்கு செலவு செய்து கொண்டிருக்கிறார்.

     விலை உயர்ந்த ஆடை அணிகலன்களைப் பரிசாகப் பெறுகிறார்.

     பெருநிறுவன, தம்இன, மார்வாரிபணியா பணமுதலைகளோடு கைகோர்த்துக் கொண்டு அவர்கட்சியின் முன்னனித் தலைவர்களை எல்லாம் முந்தி-

     500, 1000 ரூபாய்தாள் செல்லாது என அறிவித்து சிறுமுதலாளிகளின் அவர்தம் மனைவியர் அஞ்சறைப் பெட்டி வரை தனது கைகளை நீட்டிய மோடி-

     தன் மலரும் நினைவுகளை மீட்டி செய்தியாகிறார். அவரது திடீர் பொருளாதார சமூக வளர்ச்சி குறித்த கேள்வி கூட எதுவும் இல்லை.

     சந்தியா - ஜெயராம் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ந்தேதி மைசூர் அரண்மனை வாரிசுகளுக்கே உரிய பெயரின் முன் ஜெய என்று சேர்க்கும் பெருமைமிக்க தகுதியை பெற்ற குழந்தையாக ஜெயலலிதா எனப் பெயர் சூட்டப்பட்டவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.     ஜெயலலிதா. பிஷப் காட்டன்ஸ் பள்ளியில் பயின்று 1963 ம் ஆண்டு பதின்மப் பள்ளித்தேர்வில் ஜெயலலிதா  மாநிலத்திலேயே முதல்மாணவியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

     ஜெயலலிதா மிக இளம்வயதிலேயே திரைத்துறையில் நுழைந்த பல ஆண்டுகள் முன்னனி நடிகையாக ஒளிர்ந்தார்.      ஜெயலலிதா 5 அகவையில் அவரது புகைப்படம் ஒன்று  இந்திய புகைப்படக் கண்காட்சியில் முதல்பரிசுக்குத் தேர்வாகி தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.

     எட்டு அகவையில் முதன்முறையாக திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஜெயலலிதா.   

      மிதமிஞ்சிய அறிவும் திறமையும் போன்ற ஜெயலலிதாவின் குணங்கள் எம்.ஜி.ஆருக்கு அவர் மேல் மதிப்பைக் கூட்டின. தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்தார். ஒரு சில ஆண்டுகளில் மேலும் உச்சக்கட்டப் புகழடைந்தார். எம்.ஜி.ஆருடன் அதிகப்படங்களில் இணைந்து நடித்த நடிகை எனப் புகழ்பெற்றார் ஜெயலலிதா.

     மொத்தம் 127 படங்கள் நடித்த ஜெயலலிதா அத்தனை படங்களிலும் விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இவற்றில் 30 க்கும்மேற்பட்ட படங்கள் 100 நாட்களைத்தாண்டி ஓடி சாதனை படைத்தவை. சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட அத்தனை புகழ்பெற்ற நட்சத்திரங்களுடனும் ஈடுகொடுத்து நடித்தார்.

     தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தனது கட்சியில் சேர்த்து கொள்கை பரப்புச் செயலாளராக்கினார்.

     1986-ல் மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு ஆறடி உயர தங்க முலாம் பூசப்பட்ட வௌ;ளிச் செங்கோலை, கட்சி சார்பில் கொடுத்தார்.   1989 பிப்ரவரியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு பிரிவுகளும் இவருடைய தலைமையில் இணைந்த பின், ஒன்றுபட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     1991-ல் ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட அ.தி.மு.க 168 தொகுதிகளில் போட்டியிட்டு 164 இடங்களில் வென்றது. ஜெயலலிதா முதல்முறை முதல்வர் ஆனார். 

     தொடர்ந்து 2016 மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வென்று முதல்வர் ஆனார் ஜெயலலிதா.

     திரைத்துறையில் இருந்தபோது 1972 ஆம் ஆண்டு தமிழக அரசின் “கலைமாமணி” விருது

     1991 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம், 1992 ஆம் ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், 1993 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அதே ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை “டாக்டர்” பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

     இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டிலும் பாலின சமத்துவம் மற்றும் சமுதாயத்தில் நலிந்த பிரிவினரைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் சேவை புரிந்தமைக்காக, 2004 ஆம் ஆண்டு, “தங்கத் தாரகை”விருது சர்வதேச மனித உரிமை பாதுகாப்புக் குழுவினால் வழங்கப்பட்டது.

 

     2011 ஆம் ஆண்டு, இவருடைய மிகச் சிறந்த சேவை மற்றும் ஆளும் திறமையைப் பாராட்டியதோடு, தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் இவரது சேவையைப் பாராட்டி அமெரிக்க நாட்டில் உள்ள நியு ஜெர்ஸி பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது.

     ஆனாலும் 1991-96-ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த ஜெயலலிதா,

வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்து ஒரு அன்பழகன்-

இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2017 பிப்ரவரி 14 ந்தேதி,

தம் கட்சியினரால் அம்மா என அழைக்கப்பட்டவர், கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்துவதில் திறமைசாலி, ஒன்றரைக்கோடி தொண்டர்கள் இருந்தபோதும் கட்சிக்குள் ஒரு சிறு முனகலும் இல்லாதபடி வழிநடத்தியவர்,

குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளிக்க காரணமானார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு உடல்நலக்குறைவால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் பிரார்த்தனை செய்துவந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவரது மரணம் நிகழ்ந்தது.

     ஜெயலலிதா ஒரு புத்தகப்பிரியை. தேர்ந்த எழுத்தாளரும்கூட. தமிழ், ஆங்கிலம், இதழ்களில் கட்டுரைகள் தொடர்கள் பல எழுதியுள்ளார். பிரபல வார இதழில் சுமார் 30 வாரங்கள் தனது சுயசரிதையை, ‘மனம் திறந்து சொல்கிறேன்’ என்ற தலைப்பில் எழுதினார்.

ஒருத்திக்கே சொந்தம் என்ற நாவலும் எழுதியிருக்கிறார். துக்ளக் பத்திரிகையிலும் அரசியல் விமர்சனங்களை தனது பார்வையில் தொடராக எழுதியிருக்கிறார். பொம்மை சினிமா இதழில் வேதா நிலையம் என்ற தலைப்பிலும், தாய் வார இதழில் எனக்குப் பிடித்தவை என 13 வாரங்கள் தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவையன்றி, தனது இளமைப்பருவம் சினிமா குறித்து தொடர் கட்டுரை எழுதினார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் எழுதிய பல கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழில் நான்கு முழு நீள நாவல்களும் பல சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

     ஆனாலும் அவர் மலரும் நினைவுகளை களங்கப்படுத்திட ஓர் அன்பழகன் காரணமாகிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.