Show all

வருகிறது பசுமாடுகளுக்கும் ஆதார் அட்டை; ரூ148 கோடி ஒதுக்கீடு

     மனிதர்களுக்கு இந்தேயாவில் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதைப் போல, பசுமாடுகளுக்கும் அடையாள அட்டை வழங்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     பசு மாடுகளின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள நடுவண் அரசு, விரைவில் பசுக்களின் பாதுகாப்புக்கென அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

     பசுவதையைத் தடுக்கும் வகையில் நடுவண் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி இந்தக் குழு 500 பக்கங்கள் அடங்கிய பரிந்துரை அறிக்கையை வழங்கியுள்ளது.

     பசு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில், மாநில அரசுகளுக்கு அதிக பொறுப்புள்ளதாக அந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     குஜராத் மாநிலத்தில் கடந்த ஆண்டு பசு மாடுகளை இறைச்சிக்காக கடத்தியதாகக் கூறி தலித்துகள் சிலரால் அடித்துக்கொல்லப்பட்டனர். மேலும் சில இடங்களில் இஸ்லாமியர்கள் மீதும் இதே போன்று பசுப் பாதுகாப்பாளர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

     இந்த நிலையில் பசுக்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கினால், இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்காது என்று பசு பாதுகாப்பு ஆர்வலர்கள் கருத்துக் கூறியிருந்தனர். இதைப் பரிசீலித்து தற்போது பசுக்களுக்கும் ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்கப்படும் என்று நிபுணர்கள் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

     இந்தேயாவில் சுமார் 9 கோடி பசுமாடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றுக்கு மொத்தம் 148 கோடி ரூபாய் செலவில் அடையாள அட்டை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

     ஒரு அடையாள அட்டை 8 ரூபாய் செலவில் மஞ்சள் நிறத்தில் தயாரிக்கப்படும் என்றும் அதில் 12 இலக்க அடையாள எண் இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

     ஆரியர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் இமயமலையின் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மாடுகளோடு நாடோடிகளாக-

அன்றைக்கு நாவலந்தேயம் என்று அழைக்கப் பட்ட இந்தேயாவிறகுள் குடியேறினர்.

     நாவலந்தேயத்திற்கு பாரத் தேஷ்  என்று பெயா; சூட்டி வேதகால நாகரீகத்தை கட்டமைத்தனர்.

     ஆரியர்களுக்கு பசுக்கள் அன்று முதல் இன்று வரை தெய்வம்.

     அவர்கள் வந்த போது நாவலந்தேய மக்களான தமிழர்கள் நீரைத் தேக்கி வோளாண்மையில் ஈடுபட்டு வந்தனர்.

     ஆற்றங்கரையையும் கரையோரத்து புல் பூண்டுகளையும் தேடி வந்தவர்களுக்கு தமிழர்கள் நீரைத் தேக்கி வைத்திருப்பது கடுமையான கோபத்தை உண்டாக்கியது.

     நள்ளிரவில் அணைகளை இடித்தார்கள்; அதை, அந்தக் கோபத்தை அவர்கள் ரிக் வேதத்திலேயே பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

     அந்த நீதிகளைப் போற்றும் பாஜக வேளாண்மை சாராமல் வெறுமனே மாடுகளைப் போற்றும் வேலையைச் செய்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.