Show all

அரசியல் உலகம் புகழாரம்! பாஜகவினரில் ஒற்றை மாநிலவாதி மனோகர் பாரிக்கர்; மறைந்தார்; இனி கோவா நிலை

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மனோகர் பாரிக்கரின் இறப்பு கோவாவின் சமூக அரசியல் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

நாட்டின் பிற பகுதிகளில் வலுவான ஹிந்துத்துவா கொள்கையை பாஜக கடைபிடிக்கும் போது, அக்கட்சியை சேர்ந்த மனோகர் பாரிக்கர், மிதமான ஒரு கொள்கையை கடைபிடித்து கோவாவின் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து சென்றார்.

தமிழகம் போன்று மதச்சார்பற்ற கொள்கைகளைக் கடைபிடிக்கும் ஒரு மாநிலத்தில், அவர் அரசியல் செய்ய வேண்டியிருந்தது. அங்கு அவர் கொண்ட கொள்கையைக் காட்டிலும் மாநிலத்திற்கு ஏற்றார் போல் அவரை மாற்றிக் கொள்ளும் தேவையும் இருந்தது.

ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலத்தில் அவர் அரசியல் செய்ய வேண்டும் என்றால் இம்மாதிரியான தாராளவாத கொள்கையை கடைபிடிப்பாரா என்பது நமக்கு தெரியாது. அதிகாரம் அனைவரையும் மாற்றும். மனோகர் பாரிக்கரையும் அது மாற்றியது.

அவர் தனது சொந்த கட்சியின் ஆதரவை பெற்ற அரசாங்கத்தை கலைத்து, கோவாவின் அதிகாரத்தை கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்த தருணத்திலும், மாநிலத்தின் நிலையற்ற தன்மை மற்றும் ஊழலை ஒழிக்கும் ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள லட்சியவாதியாகவும், நல்லவராகவும் தன்னைக் காட்டிக் கொண்டார்.

தனது கட்சியின் மீது மக்கள் நம்பிக்கையற்று இருந்த நிலையில், தனது தனிப்பட்ட கருத்துகளுடன் சேர்த்து புதிய கொள்கைகளை முன்வைத்தார். படித்த நடுத்தர வர்க்கத்தினர் இவரை நம்பத் தொடங்கினர். பாரிக்கர் அவர்களின் கதைத்தலைவரானார்.

பாஜகவை சேர்ந்த கடும்போக்குவாதிகளை அவர் தள்ளியே வைத்தார். தீவிர வலதுசாரி கொள்கையை அவர் அங்கு கடைபிடிக்கவில்லை. இது கோவாவின் பாஜக, இங்கு விசயங்கள் மாறுபட்டுதான் நடைபெறும் என்று தெரிவிப்பார்.

முதலில் இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து செயல்பட்டது வெகுவாக பாராட்டப்பட்டாலும், இவர் பதவியில் இருந்தபோதுதான் சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. உரி தாக்குதலுக்கு பிறகு இவருக்கு பெருமை வந்து சேர்ந்தாலும், டெல்லியில் இருக்க அவருக்கு விருப்பமில்லை. டெல்லி அரசியலின் இரக்கமற்ற தன்மையா, அல்லது அவரது அமைச்சகத்தை நிர்வகிக்க போதிய திறமையில்லையா என்று தெரியவில்லை, மீண்டும் கோவாவுக்கு திரும்புவதையே தேர்ந்தெடுத்தார் பாரிக்கர்.

தன் இறுதி மூச்சு வரை, அவர் ஏன் முதல்வராக பதவியில் இருந்தார் என்று பலரும் வியப்படையலாம். அவர் கடுமையாக நோய்வாய்பட்டிருந்தார். கடைசி நாட்களை அவரது குடும்பத்துடன் அவர் செலவழித்திருக்கலாமே? பலவீனமாக இருந்தபோதும் ஏன் பொது வெளியில் வந்தார்? மாநிலத்திற்கு நன்மை செய்திருக்கக்கூடிய வேறு ஒரு நபருக்கு வழி விட்டிருக்கலாமே?

கோவாவில் அவரது கட்சி சுக்குநூறாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது இரக்கமே இல்லாமல் விலகிவிட்டார் பாரிக்கர். கோவாவுக்கு சர்வதேச திரைப்பட விழாவை கொண்டு வந்தது இவர்தான். அதுமட்டுமல்லாது, கோவா மாநில தகுதி பெற்றதில் இருந்து பெரும் அளவிலான உள்கட்டமைப்பு மேம்பாடுகளை பாரிக்கர் மேற்கொண்டுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அப்போது தனது முதலமைச்சர் காலம் முடிவடைந்தவுடன் தீவிர அரசியிலில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்தார். எனினும், இறுதிவரை அவர் பதவியில் இருந்தார். கோவாவுக்கு நம்பிக்கை அளித்து, அதை அவரே எடுத்துக் கொண்டும் போய்விட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,095.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.