Show all

பாஜகவின் வெற்றியை மக்கள் செரிமானம் செய்து கொள்ள அச்சாரமாக ரிபப்ளிக் தெலைக்காட்சியின் கருத்துக் கணிப்பா

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் சட்டமன்றத்தில் எந்த கட்சி வெல்லப்போகிறது என்று 3 கருத்துக் கணிப்பு முடிவு சராசரிகளை ரிபப்ளிக் தெலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

3கருத்துக்கணிப்புகளுமே பாஜகவின் வெற்றி வாய்ப்பை உறுதிபடுத்துகின்றனவாம் குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆட்சிக்கான அங்கீகரமாக பார்க்கப்படுகின்றனவாம். நரேந்திர மோடியின் சொந்த மாநில மக்கள் பாஜகவின் அதிரடி பொருளாதார மாற்றங்களான சரக்கு,சேவைவரி பணமதிப்பிழப்பு விவகாரங்களை எப்படி பார்க்கின்றனர் என்ற எதிர்பார்ப்பே குஜராத் தேர்தல் முடிவுகளை அனைவரையும் பார்க்க வைத்துள்ளதாம். குஜராத் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் ரிபப்ளிக் தெலைக்காட்சி 3கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு அது குறித்து ஆய்வு செய்து வருகிறதாம்.

சி வோட்டர் கருத்துக்கணிப்பில் பாஜக 108 இடங்களில் வெல்லும் என்றும், காங்கிரஸ் கட்சி 74 இடங்களில் வெல்லும் என்றும் கூறியுள்ளதாம்.

இதே போன்று ரிபப்ளிக் தொலைக்காட்சி கூட்டாளியான நிர்மான தொலைக்காட்சி பாஜக 104 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 74 இடங்களிலும் இதர கட்சியினர் 4 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று முடிவுகளை வெளியிட்டுள்ளதாம்.

ஜன் கி பாத் என்ற மற்றொரு கருத்துக்கணிப்பு முடிவில் 115 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சி 65 இடங்களை கைப்பற்றும் என்றும் இதர கட்சிகள் 2 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்துள்ளதாம்.

இந்த 3 கருத்துக்கணிப்பின் ஒட்டுமொத்த விழுக்காட்டு அடிப்படையில் சராசரி முடிவாக பாஜக மொத்தம் 109 இடங்களை கைப்பற்றும் என்று ரிபப்ளிக் தொலைக் காட்சி முடிவு வெளியிட்டுள்ளது.

எதற்கு இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்று எதிர்கட்சிகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன.

மாயவதி குறிப்பிட்ட வாக்குபதிவு எந்திரங்களில் தில்லாலங்கடி வேலைகளை அரங்கேற்றுவதற்கான ஒத்திகையாக இருக்குமோ! மக்கள் எதிர்பாராத வெற்றிகளை அரங்கேற்றி விட்டு, வெற்றி எதிர்பார்த்தது தானே என்று கருத்துக் கணிப்பை முன் வைப்பதற்கா என்ற கேள்வி எழுந்துள்ளது.

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (20.05.2017) செய்தி இதழ்களில் வெளியான பின்வரும் செய்தியை ஒப்பிட்டு ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பின்னனியைப் புரிந்து கொள்ளலாம்.

அர்னாப் கோஸ்வாமியின், ரிபப்ளிக் தெலைக்காட்சிக்கு முதலிடம்: ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் கடும் எதிர்ப்பு - ‘டிஆர்பி நடைமுறையில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

ரிபப்ளிக் டிவி ஆங்கில செய்தி தொலைக்காட்சி ‘டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதற்கு மற்ற ஆங்கில செய்தி தெலைக்காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

‘தி பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் (பிஏஆர்சி) என்ற அமைப்பு நாடு முழுவதும் ஒளிபரப்பாகும் தெலைக்காட்சிகள் மற்றும் அவற்றின் நிகழ்ச்சிகளை ஆய்வு செய்து ‘டிஆர்பி ரேட்டிங் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதிக பார்வையாளர்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகள் அடிப்படையில் ‘டிஆர்பி ரேட்டிங் தயாரிக்கப்படுகிறது.

ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் தொடர்பாக பிஏஆர்சி அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட பட்டியலில் அர்னாப் கோஸ்வாமி யின் ‘ரிபப்ளிக் டிவி செய்தி தொலைக்காட்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பிரபல செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த அர்னாப் கருத்து வேறுபாடு காரணமாக ஆறுமாதங்களுக்கு முன் அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். சில முதலீட்டாளர்கள் துணையுடன் ‘ரிபப்ளிக் டிவி என்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சியை இரண்டு வாரங்களுக்கு முன் அவர் தொடங்கினார்.

ஒளிபரப்பைத் தொடங்கிய இரண்டு வாரங்களில் அந்த தொலைக்காட்சி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் அந்த தெலைக்காட்சியை 20 லட்சத்து 11 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர் என்று பிஏஆர்சி தெரிவித்துள்ளது.

இந்த ‘டிஆர்பி ரேட்டிங் கணிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது என்று இதர செய்தி தொலைக்காட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. செய்தி ஒளிபரப்புச் தொலைக்காட்சிகள் இணைந்து என்பிஏ என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதில் 23 தொலைக்காட்சிகள் உறுப்பினர்களாக உள்ளன.

என்பிஏ சார்பில் பிஏஆர்சி அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத் தில், “டிஆர்பி ரேட்டிங் கணிப்பு நேர்மையாக இல்லையென்றால் பிஏஆர்சி நடைமுறையில் இருந்து வெளியேறுவோம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் என்பிஏ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மத்திய தொலைத் தொடர்பு ஆணைய (டிராய்) விதிகளை ‘ரிபப்ளிக் தொலைக்காட்சி மீறி வருகிறது. அந்த தொலைக்காட்சி மீது டிராய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதனிடையே என்டிடிவி ஆங்கில செய்தி தொலைக்காட்சி நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், “பிஏஆர்சி அமைப்பின் டிஆர்பி ரேட்டிங் நடைமுறையில் இருந்து என்டிடிவி வெளியேறுகிறது. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் உள்ளிட்ட வேறு சில தொலைக்காட்சிகளும் டிஆர்பி ரேட்டிங் நடைமுறையில் இருந்து விலகியுள்ளன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,636

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.