Show all

காஷ்மீரையும், அருணாச்சல பிரதேசத்தையும் அமெரிக்க நிறுவனம் மூலம் ஒளித்து வைத்த சீனம்

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவில் காஸ்ட்கோ எனப்படும் பன்னாட்டு சில்லரை விற்பனை நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சில்லரை விற்பனை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் கிளைகள் அமெரிக்கா, பிரட்டன், கனடா, ஜப்பான், தைவான், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ் உட்பட உலகின் பல்வேறு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் கனடாவில் முக்கிய நகரம் ஒன்றில் இந்நிறுவனத்தின் பன்னாட்டு பேரங்காடியில் உலக உருண்டை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் காஷ்மீர், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் இல்லாதது போல் உலக வரைபடம் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதில் ‘தயாரிப்பு சீனம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்திய வரைபடத்தை சிதைக்கும் வகையில் இருந்த அந்த உலக உருண்டையில் காஷ்மீர் தனி நாடாகவும், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதியாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் மீது கனடாவில் வாழும் இந்தியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த உலக உருண்டையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் தீயாகப் பரவிவருகிறது. கீச்சுவிலும் இந்தியர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,636

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.