Show all

நேற்றோடு எட்டு நாட்களாக முடங்கிய பாராளுமன்றம்! பிரச்சனைகள் 1.ஆடுதாண்டும் காவிரி ஆக்கிரமிப்பு 2.ராபேல் ஒப்பந்த விவகாரம்

07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க் கிழமை தொடங்கி நடைபெற முயலப்படுகிறது. ஆனால் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள்: 1.கருநாடக அரசியல்வாதிகளின் ஆடுதாண்டும் காவிரியில் அணை ஆக்கிரமிப்பு, நடுவண் அரசின் அனுமதிப்பு விவகாரம், 2.ரபேல் விவகாரம் உள்பட பல்வேறு  விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில், கருநாடக அரசியல்வாதிகளின் ஆடுதாண்டும் காவிரியில் அணை ஆக்கிரமிப்பு, தொடர்பாக அதிமுக உறுப்பினர்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் தெலுங்குதேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி பாராளுமன்றஉறுப்பினர்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் அமளி நீடித்தது. இதையடுத்து, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பிறகு, இனி வரும் வியாழக் கிழமை அன்றுதான் பாராளுமன்றம் கூட உள்ளது. 

இதேபோல் மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக காவிரி விவகாரம், ரபேல் விவகாரம், தொடர்பாக உறுப்பினர்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பினர். இதன் காரணமாக பிற்பகல் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. உறுப்பினர்களின் அமளி காரணமாக 8-வது நாளாக பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,009.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.