Show all

கருத்துக் கணிப்பு மற்றும் அனைத்துகட்சி கூட்டம்! புல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பதிலடி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதல்: இந்தியாவின் பதிலடி எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து ஒரு இயங்கலை இதழ் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. 

அந்த இயங்கலை இதழ் நான்கு தீர்வுகளை முன் வைத்திருக்கிறது. 

1.பேச்சுவார்த்தை நடத்தலாம். 

2.மீண்டும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தேவை. 

3.பாகிஸ்தானை தனிமைப்படுத்தலாம் 

4.போர்தான் தீர்வு.  

இந்த நான்கு வகையான யோசனை அந்த இதழுக்கு வந்ததற்கான காரணம்: அந்த நான்கு வகையான தீர்வுகளிலும் ஒரு நியாயம் இருக்க வாய்ப்பு இருப்பதுதான். 

அந்த நான்கு வகையான தீர்வுகளில் எது நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் என்பதுவே, இந்தியாவின் முன்னெடுப்பாக இருப்பது இந்தியாவிற்கு நல்லது.

இந்த நான்கு வகையான தீர்வுகள் ஒவ்வொன்றுக்கும் மக்கள் அளித்த வாக்குகள் விழுக்காடு:

1.பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று 10.62விழுக்காட்டினரும் 

2.மீண்டும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தேவை என்று 33.28விழுக்காட்டினரும், 

3.பாகிஸ்தானை தனிமைப்படுத்தலாம் என்று 22.38 விழுக்காட்டினரும் 

4.போர்தான் தீர்வு என்றும் 33.72 விழுக்காட்டினரும் தாங்கள் விரும்பும் தீர்வாக முன் வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே புல்வாமா தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடுவண் அரசு கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு நாடு முழுவதும் அனைத்து முதன்மை அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நிதி அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் தொடர்பான விவரங்களை ராஜ்நாத் சிங் எடுத்துக் கூறினார். எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். நடுவண் அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளும் தெரிவித்தன.

எனவே, பயங்கரவாதிகளுக்கும், அவர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விடும் பாகிஸ்தானுக்கும் எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்று நடுவண் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னம் காஷ்மீரில் உரி பகுதி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது குண்டு வீசி துல்லியல் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டன. ஏராளமான பயங்கரவாதிகளும் பலியானார்கள். 

அதுபோன்ற தாக்குதலுக்கு இந்திய விமானப்படை தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் பாகிஸ்தானும் தனது எல்லையில் படைகளை விழிப்பூட்டி வருகிறது. இதனால் பாகிஸ்தானையொட்டியுள்ள காஷ்மீர் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. 

பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்தினரும், நாட்டு மக்களும் தெரிவித்து வருகிறார்கள். மத்திய அரசு பதிலடி கொடுத்தால்தான் அவர்களது ஆவேசம் அடங்கும் என்பதால் ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,065.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.