Show all

சசிகலா வீசியுள்ள, தீப்பந்தம் தினகரன் மட்டுமே, பாஜகவின் 4800கோடி சிசிச்சையைத் தீக்கிரையாக்க முடியும்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தெலுங்கு நடிகர் சிவாஜி போட்டு உடைத்த சிகிச்சை திராவிடம் ரகசியம் தமிழக அரசியலில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் தென் இந்தியாவை குறிவைத்து காய் நகர்த்த ரூ.4,800 கோடியில் சிகிச்சை திராவிடம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சொன்ன காரணங்களும் தமிழக அரசியலில் அரங்கேறும் நிகழ்வுகளும் அச்சு அசலாக ஒத்துபோகின்றன. பாஜக மாநிலக் கட்சிகளோடு கைகோர்த்துக் கொண்டு ஸ்லீப்பர் செல்கள் என்கிற உள்ளடி ஆட்கள்; மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறது என்பது தான் சிகிச்சை திராவிடத்தின் பொருள்நிரல். ஏற்கனவே இதற்கான பணிகளை பாஜக தொடங்கிவிட்டதாகவும், எதிர் வரும் தேர்தல்களில் தென்இந்தியாவில் கால்தடம் பதிக்கவே இந்த முயற்சி என்றும் போட்டு உடைத்தார் தெலுங்கு நடிகர். 

யார் பாஜகவின் உள்;ளடி ஆள்? இதில் முதன்மையாகப் பார்க்க வேண்டிய விசயம் தமிழகத்தில் பாஜகவின் ஸ்லீப்பர் செல்களாக யார் இருக்கிறார்கள் என்பது தான். அதிமுக அரசை பின்னால் இருந்து பாஜக இயக்கி வருவதாக தொடக்கம் முதலே கூறப்படுகிறது. 

இந்த உள்ளடி ஆளாக முதலில் தேர்வு செய்யப் பட்டது சசிகலா. அதன் பொருட்டே செயலலிதா மரணத்திற்கு வந்த மோடி தலையை தடவி சசிகலாவை ஆசிர்வதித்தது. சசிகலா மீது வழக்கு இருப்பதால் பாஜகவின் திட்டத்திற்கு சசிகலா பணிந்து போவார் என்பது பாஜகவின் எண்ணத்திற்கு அடிப்படை. அந்த அடிப்படையிலேயே செயலலிதா ஒப்புக்குச் சப்பானியாகப் பயன் படுத்தி வந்த பன்னீர் கையில் ஆட்சி, சசிகலா கையில் கட்சி என்ற பாஜகவின் தொடக்க நிலை நகர்வாக இருந்தது. சசிகலா ஒற்றையாள் இராணுவம், அவர் கையில் செயலலிதாவைத் தாண்டி பெரும்படை இருந்தது. சசிகலாவின் வழி தனிவழி! அவர் எங்கிருந்தாலும் அவர்தான் முதன்மையராக இருப்பார். என்பதெல்லாம் பாஜக பிறகு புரிந்து கொண்ட தகவல்கள். சசிகலா கட்சி பொறுப்பு கிடைத்தவுடனேயே ஆட்சிக்கு குறி வைத்தார். தங்களுடைய 4800 கோடி ரூபாய் சிகிச்சைக்;கே எதிர் சிகிச்சையா என்று விழித்துக் கொண்டது பாஜக. இடைப்பட்ட நேரத்தில், மாபெரும் மக்கள் போராட்டம் சல்லிக்கட்டு வேறு பாஜகவின் பொருள்நிரலுக்கு இடையே குறுக்கிட்டது. 

ஒருவழியாக சல்லிக்கட்டு போராட்டத்திற்கு வெற்றியையும் தந்து, போராட்டத்தை அசிங்கமும் படுத்தி, பன்னீரை உள்ளடிஆளாகக் கடைந்தெடுத்தது பாஜக. தன்தனிவழியில் ஆட்சிக்கு முயன்ற சசிகலாவிற்கு நப்புக் காட்டி ஒரு வழியாக பாரப்பன அக்ரகாரச் சிறையில் அடைத்தது.

ஆனால் சசிகலா அடங்கவில்;லை அவர் சிலகோடிகளை ஒதுக்கி, பாஜகவின் 4800 கோடி சிகிச்சைக்கு எதிர்சிகிச்சையளிக்கிறார் தினகரனை களமிறக்கி. இப்போதைக்கு தமிழகத்தில் வெளிப்படையாக பாஜகவின் 4800கோடி சிகிச்சைக்கு எதிர்நிலை மேற்கொண்டு வருவது, தினகரன் வழியாக சிலகோடிகளில் திட்டமிடப்பட்ட அதிமுக மீட்பு சசிகலா சிகிச்சை மட்டுமே.

பாஜக 4800கோடி சிகிச்சையில், பன்னீரை உள்ளடிஆளாக வைத்து, சசிகலாவால் மாற்றி பதவி வழங்கப் பட்ட எடப்பாடிக்கே வலைவரித்து, பன்னீர் எடப்பாடி தலைமையில் ஆட்சியையும்  கட்சி சின்னத்தையும் வாங்கிக் கொடுத்து விட்டது. ஆனால் கட்சியை மீட்கவில்லை என்பது சசிகலாவிற்கு (தினகரன்) மட்டுமே தெரியும்.

திமுகவை அணைத்து வைக்க கனிமொழி ஆ.இராச விடுலையை பரிசாகத் தந்திருப்பதும், அமலாக்கத்துறை மூலம் வழக்கை கையிலெடுத்திருப்பதும், பாஜக சிகிச்சைதான். 

சீமான். திருமுருகன் காந்தி, வைகோ, திருமாவளவன், அன்புமணி இவர்களையெல்லாம் பாஜக ஒருபொருட்டாகவே கருதாது. அவர்களை எப்போது வேண்டுமானலும் சிறைக்கு அனுப்ப ஏராளமான தேசத்துரோக,  பிரிவினைவாத ஆதாரங்கள் காவல்துறை மூலம் சேமித்து வைக்கப் பட்டிருக்கிறது.

இப்போதைக்கு பாஜக சிசிச்சைக்கு எதிராக, உண்மையான எதிரியாக இருப்பதும், எதிரிக்கான பாதிப்பில் இருப்பதும், நெருப்பாக இருப்பதும் சசிகலா மட்டுமே. அவர் வீசியுள்ள தீப்பந்தம்  தினகரன் மட்டுமே பாஜகவின் 4800கோடி சிசிச்சையைத் தீக்கிரையாக்க முடியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,736.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.