Show all

ஜப்பான் பயணத்தில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி சாதனை! குச்சிகளை பயன்படுத்தி சாப்பிட கற்றுக்கொண்டார்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜப்பான் சென்றுள்ள இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியை, அந்நாட்டின் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே நேற்று யமனாஷி நகரில் உள்ள தனது சொந்த இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவருக்கு இரவு நேர உணவு வழங்கி உபசரித்தார்.

வழக்கமாக ஜப்பானியர்கள் 'சாப்ஸ்டிக்ஸ்' என்னும் 2 குச்சிகளை பயன்படுத்தி அதன் மூலம் உணவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடுவது வழக்கம். இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளுடன் இதேபோல் குச்சிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதைக்கொண்டு எவ்வாறு சாப்பிடுவது என்பது தெரியாமல் மோடி சற்று தயங்கினார்.

மோடி அவர்களின் தயக்கத்தைக் களைந்து 'சாப்ஸ்டிக்ஸ்' என்னும் 2 குச்சிகளை பயன்படுத்தி அதன் மூலம் உணவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடுவது எப்படி என்று ஜப்பான் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே கற்றுத் தந்தார். இந்தியாவின் உணவுப் பழக்க வளர்ச்சிக்காக, மோடி அவர்கள் குச்சிகளால் சாப்பிடும் கலையைக் கற்றுக் கொண்டு அசத்தினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,955.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.