Show all

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடி 9வது இடத்தில்

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலில் மோடி 15 வது இடத்திலிருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று பிரபல பொருளாதார இதழான ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பொருளாதார இதழ் வெளியிட்டது.

இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடம் பிடித்திருக்கிறார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 2 வது இடமும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 3 வது இடமும் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் மோடி 15 வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பத்து இடங்களில் போப் ப்ரான்சிஸ் 4 வது இடத்திலும்,

சீன அதிபர் ஜி ஜிங்பிங் 5 வது இடமும் பிடித்துள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கூகுள் நிறுவனத்தின் லேரி பேஜ் ஆகியோர் 6 வது மற்றும் 10 வது இடங்களில் உள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.