Show all

சபர்மதி ஆற்றில், கடல்இறங்கு விமானத்தில், குஜராத் தேர்தல் கருத்துப் பரப்புதலுக்காக, மோடி பயணம்

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடல்இறங்கு விமானம் மூலம் இன்று சபர்மதி ஆற்றில் இருந்து புறப்பட்டு மக்சேனா மாவட்டத்திற்கு செல்கிறார் மோடி.

சபர்மதி ஆற்றில் முதன்முறையாக ‘கடல்இறங்கு விமானப் பயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு நாளைமறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் இத்தேர்தல் அக்கட்சியினருக்கு வெற்றிபெற்றாக வேண்டுமே என்கிற அச்சத்;தை உருவாக்கியுள்ளது. இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான கருத்துப் பரப்புதல் இன்று மாலையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில்,

அகமதாபாத் நகரில் சபர்மதி ஆற்றில் இருந்து தண்ணீரில் மிதக்கும் ‘கடல்இறங்கு விமானம் மூலம் இன்று தனது பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து மக்சேனா மாவட்டத்தில் உள்ள தோராய் அணைக்கும், அம்பாஜி கோயிலுக்கும் செல்கிறார். பின்னர் அதே வழியில் திரும்புகிறார்.

எல்லாப் பகுதிகளிலும் விமான நிலையம் இல்லாததால், ‘கடல்இறங்கு விமானத்தை பயன்படுத்தி கருத்துப் பரப்புதலை மேற்கொள்கிறார் மோடி.

‘கடல்இறங்கு விமானம் என்பது நீரில் மிதந்தபடி பறந்து செல்லும் திறன் கொண்டது. அதுபோலவே தண்ணீரில் தரையிறங்கும். கடல் பகுதியில் இறங்கவும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லவும் வசதியாக இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மோடி எல்லாதொழில் நுட்பத்தையும் தனக்காக பயன் படுத்துவார். ஆனால் மக்களுக்காக ஒரு ஆணியும் பிடுங்க மாட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,634

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.