Show all

ஏழைச் சிறுமியின் உயிரைப் பலிவாங்கிய மோடியின் ஆதார் அடாவடி

இன்று 31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என நடுவண் அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இது குறித்த வழக்கு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. இதனால் இன்னும் பலர் குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காமல் உள்ளனர்.

இந்நிலையில், ஜார்க்ண்ட் மாநிலத்தில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்காத ஏழைக் குடும்பத்தினருக்கு அரிசி வழங்க குடும்ப அட்டைபொருள் கடை ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால், உணவுக்கு வழியின்றி, 11 அகவை சிறுமி பட்டினியால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டெகா என்ற இடத்தில் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. மிகவும் வறுமையில் வாடும் அந்த குடும்பத்தினர், போதிய கல்வியறிவு பெறாதவர்கள் என கூறப்படுகிறது. தங்களது குடும்ப அட்டையை, ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என்ற விவரமும் அவர்களுக்கு தெரியவில்லை.

இந்த நிலையில், வழக்கம் போல் குடும்ப அட்டைபொருள் கடைக்கு சென்றபோது, அரிசி வழங்க குடும்ப அட்டைபொருள் கடை ஊழியர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, பசியின் கொடுமையால் உயிரிழந்த சம்பவம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கும் மோடி அரசுக்கு ஒட்டு மொத்த இந்தியாவே கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.