Show all

சாமியார்களுக்கு இணை அமைச்சர் தகுதி! இந்தியாவில், மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்துவதற்காக

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எம்ஜியார் காலத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்களை அரசவைக் கவிஞராக அங்கிகரித்ததைப் போல, தங்கள் கட்சியின் மதவாத அடிப்படைக்கு பொருந்தியவாறு மத்திய பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் 5 மதகுருக்களுக்கு இணை அமைச்சர் தகுதி  கொடுத்துள்ளார். 

முதல்வரின் இந்த விநோத நடவடிக்கையால், எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. தற்போது முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையில் இங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஓடும் நர்மதா ஆற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கையை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் உயிர்நாடியாக நர்மதா ஆறு கருதப்படுகிறது. எனவே நர்மதா ஆற்றின்  சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தனித்தனி குழுக்களை சிவராஜ்சிங் சவுகான் ஏற்படுத்தி உள்ளார். அந்த குழுவினர் நர்மதா ஆற்றுப் பாதுகாப்பு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 5 சாமியார்களுக்கு சிவராஜ் சிங் சவுகான் இணை அமைச்சர் தகுதி கொடுத்துள்ளார். நர்மதா நதியை பாதுகாப்பதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த 5 மதகுருக்களும் உதவி செய்வார்கள். எனவே அவர்களுக்கு இணை அமைச்சர் தகுதி வழங்கப்படுவதாக சவுகான் கூறியுள்ளார். 

இணை அமைச்சர் சலுகை- 1.கம்ப்யூட்டர் பாபா, 2.யோகேந்திர மகந்த், 3.நர்மதானந்தா, 4.ஹரிகரானந்தா, 5.பாபாயுமகராஜ் ஆகிய ஐந்து மதகுருக்ககளுக்கு இணை அமைச்சருக்கான தகுதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இணை அமைச்சர்களுக்கான சலுகைகள் வழங்கப்படும் என்றும் சவுகான் குறிப்பிட்டுள்ளார். 

கம்ப்யூட்டர் பாபா கடந்த நான்கு  ஆண்டுகளுக்கு முன்பு கும்ப மேளாவின் போது நர்மதை ஆற்றின் கரையோரம் உலங்கு வானுர்தியில் வந்து இறங்கி மக்களின் கவனத்தை ஈர்த்தவர். முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு எதிராக நர்மதை ஆறு திட்டட்தில் நடக்கும் ஊழல்களை நடைபயணம் மூலம் வெளிக்கொண்டு வர உள்ளதாகவும், முதல்வருக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடபோவதாகவும் அவர் அறிவித்திருந்த நிலையில் கம்ப்யூட்டர் பாபாவுக்கும் இணையமைச்சர் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் இலக்கியவாதிகளை மதிப்பது போல, பாஜக சாமியார்களை சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஆட்களாக மாற்றுவதில் பாஜக அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி வருகிறது. மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவே இந்த விநோத நடவடிக்கை பாஜக முன்னெடுத்து வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,747. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.