Show all

ஐபிஎல் போட்டிக்கு தடை கோரி சூதாட்ட புகாரில் சிக்கி நீக்கம் செய்யப்பட்ட காவல்பணித் துறை அதிகாரி வழக்கு

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கிரிக்கெட் சூதாட்டத்துக்கு தீர்வு காணாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி இரண்டு மாதங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் அரங்கத்தில்; 7 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இவற்றில் 3 பகல் ஆட்டங்களும், மீதமுள்ளவை இரவு பகல் ஆட்டங்களாக நடைபெறுகின்றன. 

சூதாட்டப் புகாரில் சிக்கி தடை விதிக்கப்பட்டு 2 ஆண்டுகள் கழித்து இந்த போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2013-இல் சூதாட்ட புகாரில் சிக்கி நீக்கம் செய்யப்பட்ட இந்தியக் காவல்பணித் துறை அதிகாரி சம்பத் குமார் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் பொது நலன் வழக்கு என்று தொடர்ந்துள்ளார். 

இதில் சூதாட்டத்துக்கு தீர்வு காணாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது. எனவே சென்னை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும். சூதாட்டத்தை தடை செய்யாமல் ஐபிஎல் நடத்தக் கூடாது என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார். 

அப்போது அறங்கூற்றுவர்கள் இந்த வழக்கு தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், நடுவண் அரசு ஆகியோருக்கு பத்து நாட்களுக்குள்  பதில் அளிக்க வேண்டும் என்று விளக்கம் கேட்டு கவனஅறிக்கை அளித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,747. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.