Show all

மடிவோம்! அப்பாவித் தமிழர்கள் சந்தனக் கடத்தல், செம்மரக் கடத்தல் என்ற தலைப்புகளில்

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திர மாநிலம் கடப்பா அருகேயுள்ள ஒண்டிமிட்டா ஏரியில் 7 தமிழர்களின் உடலை காவல்துறையினர் மீட்டனர். செம்மரம் வெட்ட வந்த அவர்கள், காவலர்கள் துரத்திய போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த தமிழர்கள் யார் என அடையாளம் காணப்பட்டு, அவர்களை பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 5 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், மற்றவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. சேலம் மாவட்டம் அடியனூரை அடுத்த கீழஆவாரையைச் சேர்ந்த முருகேசன் அகவை40, கருப்பணன் அகவை30, கிராங்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் அகவை27, தங்கராஜ் அகவை25, மற்றொரு முருகேசன் அகவை30, ராமநாதன் அகவை30, வெங்கடேஷன அகவை27, என தெரிய வந்துள்ளது. இவர்களில் கருப்பண்ணன் மட்டும் திருமணம் ஆகாதவர். இவர்கள் அனைவரும் சேலத்தில் உள்ள முகவர் ஒருவர் மூலம் செம்மரம் வெட்ட சென்றதாக கூறப்படுகிறது.

ஏழு தமிழர்கள் உயிரிழந்துள்ள நிலையில், திருப்பதிக்கு செம்மரம் வெட்டச் சென்ற தமிழர்கள் குறித்த புதிய திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது. ஒரு கிலோ செம்மரம் வெட்ட ரூ.500 முதல் 600 கூலி வழங்கப்படுகிறது. இதற்கு ஆசைப்பட்டு சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 170 தமிழர்கள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இவர்களில் 70 பேர் சேலத்தை சேர்ந்தவர்கள். தற்போது சேலம் மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த 7 தமிழர்கள் ஏரியில் மூழ்கி பலியாகி உள்ள நிலையில், மற்ற 163 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

சந்தனமரம் வெட்டுகிறார் என்று வீரப்பனையும், அவர்கள் கூட்டாளிகளையும் தமிழக காவல்துறை மூலம் கொன்றொழித்தோம். சந்தன மரம் வாங்கியவர்கள் யார்? பயனடைந்து நாட்டிற்குள் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யார், யார்? ஒற்றை மனிதரும் வெளிக்கொணரப் படவில்லை. இன்றைக்கு கருநாடக காவல் துறையினர், செம்மரம் வெட்டுகின்றனர் என்று அப்பாவி தமிழ் மக்களை கொன்றொழிக்கின்றனர். பயனடைகிற யாரையும் கருநாடகமும் வெளிக் கொணரப் போவதில்லை.

வாழட்டும் களவாணிகள் அரசு இயந்திரங்கள் பாதுகாப்புடன்! மடிவோம் அப்பாவித் தமிழர்கள் சந்தனக் கடத்;தல், செம்மரக் கடத்தல் என்ற தலைப்புகளில்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,703

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.