Show all

கமலைப் பற்றி மட்டும் கருத்து சொல்ல மறுக்கும் இயக்குநர் விசு! தலையைப் பிய்த்துக் கொள்ளும் திரைத்துறை

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல்ஹாசனைப் பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என்று இயக்குநர் விசு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தீவிர அரசியலில் இறங்கவுள்ளதாக அண்மையில் அறிவித்தனர். இதற்கான பணிகளில் இருவரும் அவரவர் வழிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர்களான ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. இருவரின் அரசியல் வருகை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான விசு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நடிகர் விசு, ரஜினியின் ஆன்மீக அரசியலை வரவேற்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து கமலின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தயவு செய்து கேட்காதீர்கள் அதற்கு நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராக உள்ளேன் என்ற அவர், தயவு செய்து கமல்ஹாசனை பற்றி மட்டும் எதுவும் கேட்காதீர்கள் என கூறி கையெடுத்து கும்பிட்டப்படி எழுந்து சென்றார்.

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் மற்றும் இயக்குநரான விசு ஏராளமான குடும்பச்சித்திரங்ளை கொடுத்துள்ளார். அவர் நடிகர் கமல்ஹாசன் குறித்து எதுவும் கேட்காதீர்கள் என விரக்தியோடு கூறியது தமிழ்த்திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து சொல்பவர் யார் என்று பார்க்காதீர்கள்; சொல்லப் படுகிற கருத்;து என்ன என்று பார்ப்பதே சரி என்கிற வரையறை ஒன்று இருந்தாலும், பார்ப்பனியர்களால் சொல்லப் பட்ட கருத்தா? அதற்கு அந்த வரையறை பொருந்தாது என்கிற சிறப்பு வரையறையும் தமிழகத்தில் உண்டு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,703

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.