Show all

கண்மூடித்தனமாக கடன் வாங்கும் நாடும், நாட்டு மக்களும்! இந்தியா; இந்திய மக்கள்.

கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியா! நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மொத்த கடன் 54 லட்சம் கோடி. நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொத்த கடன் 82 லட்சம் கோடி. கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியா மக்கள்! இந்திய மக்களில் 67 விழுக்காட்டு பேர்கள் கண்மூடித்தனமாக கடன் வாங்க அணியமாக இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது ஓர் ஆய்வறிக்கை.

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் எந்தவொரு திட்டங்களுக்கும் கடனை நம்பியே ஆட்சியும் நடைபெறுகிறது. நடப்பு ஆண்டு வரையில் இந்தியா கொண்டிருக்கும் கடன் சுமையானது 82 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது என்று நடுவண் நிதி அமைச்சகம் தகவல் வெளியிடுகிறது.

இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்வதற்காக என்று கடன் வாங்க அணியமாக இருப்பது, ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

உலக வங்கியிடம் இருந்து மட்டும், மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று அதிக கடனாளி நாடாக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவின் முந்தைய கடன் சுமை குறைவதற்கு எதிர்மாறாக ஆண்டுதோறும் கடன் தொகை அதிகரிப்பதே நிகழ்கிறது. எந்தவொரு திட்டங்களுக்கும் கடனை நம்பியே ஆட்சியும் நடைபெறுகிறது. நடப்பு ஆண்டு வரையில் இந்தியா கொண்டிருக்கும் கடன் சுமையானது 82 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது என்ற தகவல் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.

இந்திய மக்களில் 67 விழுக்காட்டு பேர்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்வதற்காக என்று கடன் வாங்க அணியமாக உள்ளார்களாம். 

வீட்டுக் கடன் இந்தியா என்ற நிறுவனம், இந்திய மக்கள் கடன் வாங்குவது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு குறித்த அறிக்கையில், கூறப்பட்டு உள்ளதாவது: ஆய்வில் பங்கேற்றவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர், செல்பேசி, குளர்சாதனப்; பெட்டி, தொலைக்காட்சி போன்ற நுகர்பொருள் சாதனங்களை வாங்கும் பொருட்டு, கடன் வாங்கவும் அணியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கடுத்து, இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு, 23.3 விழுக்காடு பேரும், தனிநபர் கடன் வாங்குவதற்கு, 20.3 விழுக்காடு பேரும் அணியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அடுத்து, கார் கடன் வாங்க தயாராக இருப்பதாக, 12.5 விழுக்காட்டு பேர்களும், வீடு வாங்குவதற்காக, 12 விழுக்காட்டு பேர்களும் தங்கம் வாங்குவதற்காக, 10.5 விழுக்காட்டு பேர்களும் அணியமாக இருப்பது, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

நுகர் பொருட்கள் வாங்க கண்ணை மூடிக்கொண்டு கடன் வாங்க அணியமாக இருந்தாலும், வேளாண் கடன், சுற்றுலா கடன் போன்றவற்றை வாங்குவதற்கான ஆர்வம் குறைவாகவே உள்ளது.

வேளாண் கடன் வாங்க, 0.7 விழுக்காட்டு பேர்களும், கடன் அட்டை மூலமான மாதாந்திர தவணை கடன் வாங்க, 1.1 விழுக்காட்டு பேர்களும்;, பயணங்களுக்கான கடன் வாங்க, 1.5 விழுக்காட்டு பேர்களும்;, மருத்துவக் கடன் வாங்க, 3.7 விழுக்காட்டு பேர்களும்; என, குறைவான எண்ணிக்கையிலானவர்களே ஆர்வமாக உள்ளனர்.

கடன் வாங்கும்போது, 34 விழுக்காட்டு பேர்கள், நண்பர்களின் அறிவுரைப்படி வாங்குவதாகவும், 31.8 விழுக்காட்டு பேர்கள், குடும்பத்தினர் ஆலோசனைப்படி வாங்குவதாகவும், 25.4 விழுக்காட்டு பேர்கள், உடன் பணிபுரிபவர்களின் ஆலோசனைப்படியும், கடன் வாங்குவதாக தெரிவித்துள்ளனர். 

தங்கள் சொந்த தேவைகளை விட, குடும்பத்தினரின் விருப்பம் மற்றும் தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை, 46 விழுக்காடாக உள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,241.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.