Show all

சமையல் எரிவாயு உருளை விலையை இணையவழியில் செலுத்துவோருக்கு ரூ.5 சலுகை

சமையல் எரிவாயு உருளை nullவிலையை இணையவழியில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு உருளை விலையில் ரூ.5 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

     ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு ரூபாய் தாள்களை திரும்பப் பெறும் முடிவை நடுவண் அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் நாள் அறிவித்தது. இதையடுத்து, பணத்தாள் இல்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், நடுவண் அரசு பல சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது.

     அதில், பெட்ரோல், டீசல் வாங்கும்போது அதற்கான பணத்தை பணத்தாள் இல்லா பரிவர்த்தனையின் மூலம் மேற்கொள்வோருக்கு 0.75 விழுக்காடு சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

     இந்தச் சலுகையை சமையல் எரிவாயு உருளைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் நீட்டித்துள்ளன. அதாவது, இணையவழியில் சமையல் எரிவாயு உருளையை முன்பதிவு செய்து, அதற்கான பணத்தை இணையவழியில் இணையவங்கி வசதி, கடன் அட்டை, பற்று அட்டை  மூலம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உருளை ஒன்றுக்கு தலா ரூ.5 சலுகையை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

     சலுகை தொகை ரூ.5, சமையல் எரிவாயு உருளைக்கான பணம் செலுத்தப்பட்ட நாளில் இருந்து 3 வேலை நாள்களில், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சமையல் எரிவாயு உருளையின் விலை, தில்லியில் தற்போது ரூ.434.71-ஆக உள்ளது. மானியமில்லா சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.585-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.