Show all

காவிரி அரசியலை வைத்துக் கொண்டு குப்பைக் கொட்ட முயலும் குமாரசாமி

17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறுகட்ட போராட்டத்தின் விளைவாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை நடுவண் அரசு அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

காவிரியில் இருந்து ஒரு சொட்டு நீரும் கருநாடகத்தை விட்டு வெளியில் செல்லாமல் முழுமையாக பயன்படுத்துவது குறித்தான முழங்கங்கள் தாம் கருநாடகத்தின் நீண்டகால அரசியல் தாரக மந்திரம். 

இந்திய விடுதலைக்குப் பின்பும் காவிரியில் நான்கு அணைகள் கட்டிய அத்து மீறலை அப்புறப் படுத்துவது குறித்து விவாதமே இல்லாமல், குட்ட குட்ட குனிந்து, தீர்வு கேட்டபடி காவிரி மணலை வாரி காசக்கிக் கொள்வதுதான் தமிழக அரசியல்.

கர்நாடகம், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து. அம்மாநில முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காவிரி விவகாரம் குறித்து பிரச்னையைக் கிளம்பவும் கர்நாடகா தீர்மானித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,835. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.