Show all

கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி! வெளிநாடுகளிலிருந்து வரும் நிதி நிர்வாகம் குறித்த முடிவுகள் மீது

07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நல்லெண்ண அடிப்படையில் வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவியை ஏற்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, பல்வேறு அமைப்பினரும் நிதி உதவி அளித்துவருகின்றனர். தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் கோடிக்கணக்கான ரூபாயை நிவாரண உதவியாக அறிவித்துவருகின்றன. இந்த நிலையில், கேரளாவுக்கு நிவாரண நிதியாக ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் தருவதாகத் தெரிவித்துள்ளதாக பினராயி விஜயன் அறிவித்தார்.

இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியை நடுவண் அரசு வாங்கிக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. நடுவண் அரசு மறுத்துவிடும் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக வரும் ஞாயிற்றுக் கிழமை நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்படும். மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால், நடுவண் அரசு ஏற்க வேண்டும். வெளிநாட்டு நிதியை ஏற்கலாம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கையில் உள்ளது என்று தெரிவித்தார்.

நடுவண் அரசின் கொள்கை முடிவுகளை இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தொடர்ச்சியாக அதிகாரிகளே எடுத்து வருகிறார்கள். இடையில் கொஞ்ச காலம் இந்திராகாந்தி காலத்தில் மட்டும் அரசின் கொள்கை முடிவுகளில் இந்திரா காந்தி அவர்களின் கொள்கை முடிவு இருந்தது. இராஜிவ் காந்தி காலத்தில் அரசு அதிகாரிகளின் எடுப்பார் கைப்பிள்ளையாகிப் போனார். 

அரசு அதிகாரிகளின் கொள்கைப் பாடு இந்தியக் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவே இருக்கிறது. தலைநகர் டெல்லியில் இருப்பதால், தலைமுறை தலைமுறையாக, ஹிந்தி ஹிந்துத்துவா கூடாரமாகவே அதிகாரிகள் மையம் அமைந்து விட்டது. 

இந்தியாவில் ஒரு முளையில் திராவிட இயக்கங்கள் மட்டுமே கொள்கை முடிவுகளை குத்திக்காட்டி குத்திக்காட்டி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் கொள்கை வளைத்துப் பயன் பெற்றது; அப்புறம் அது மூங்கில் மரமாய் நிமிர்ந்து விடும். இன்றைக்கு திராவிட இயக்கங்களின் தலைவர்கள் தங்கள் குடும்ப வாழ்மானத்திற்காக திராவிட இயக்கக் கோட்பாடுகளை அடகு வைத்துத் திரிகிறார்கள்.

இந்த நிலையில் கேரளா அரசு அதிகாரிகளின் கொள்கை முடிவுகளை வளைக்க எத்தனித்திருப்பது இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஆதரவான விசயம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,888.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.