Show all

கேரள மழை தமிழகத்தையும் பாதித்தது! வணிக அடிப்படையாக

08,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓணம் திருவிழாவிற்காக பூக்களை வாங்க கேரளாவில் இருந்து வியாபாரிகள் யாரும் வராததால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கன்னியாகுமாரி மாவட்ட பூக்கள் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கேரளாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பெய்த அடைமழை காரணமாக மொத்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நாளை ஓணம் திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி தோவாளையில் சிறப்பு மலர் சந்தை துவங்கியது. அத்தப்பூ கோலமிடும் கேரள மக்கள் பல கோடி ரூபாய்க்கு ஒவ்வொரு ஆண்டும் மலர்களை வாங்கி செல்வார்கள்.
இதனால் சுமார் ரூ.10 கோடி அளவிற்கு 40 டன் பூக்களுடன் வியாபாரிகள் காத்திருந்தனர். ஆனால் கேரளாவில் இருந்து வியாபாரிகள் யாரும் வராததால் மிகப்பெரிய இழப்பை சந்தித்து உள்ளதாக அவர்கள் வேதனையோடு தெரிவித்தனர். மிகப்பெரிய மலர் சந்தையான தோவாளை சந்தை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. பூக்களின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் குறைந்தது நான்கு லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,889.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.