Show all

வேலை தேடுவோர் நாடாக இல்லாமல், உருவாக்கும் நாட்டினராக உருவாகவேண்டும்: மோடி

இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் காண்பது என்பது மாரத்தான் ஓட்டம் போன்றது, ஒருசிறிய இலக்கை வேகமாக ஓடி கடப்பது போன்றது கிடையாது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்து உள்ளார்.

டெல்லியில் பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில்,

நாங்கள் 17 மாதங்களுக்கு முன்னதாக ஆட்சியில் அமர்ந்தபோது இருந்ததைவிட தற்போது இந்தியா சிறப்பான பணியினையே செய்துவருகிறது என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். என்று கூறினார்.  

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது உயர்ந்து உள்ளது, பணவீக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டு உள்ளது. இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல நாங்கள் பெரும் சீர்திருத்தங்களை எடுத்து உள்ளோம். தெளிவான செயல்திறன் நடவடிக்கை மற்றும் இயந்திரமயமாக்கலின் பொறுப்புகூறல் உள்பட திறன் அதிகரிப்பு ஆகியவற்றில் பெரும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. என்றார்.

மாநாடு 2010-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தாலும், பிரதமர் தொடங்கி வைப்பது இதுவே முதல்முறையாகும்.

இதனை நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள், ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 26000 கோடியாகும்.

நாங்கள் கடந்த 17 மாதங்களில் என்னசெய்தோம், என்பதில் 190 மில்லியன் மக்களை வங்கி கணக்கின் கீழ் இணைத்து உள்ளோம். நாங்கள் யு.ஏ.என். கணக்கு எண்ணை தொடங்கி உள்ளோம், இது பணியாளர்கள், தங்களது பணியை மாற்றினாலும் தொடர்ந்து நீடிக்கும், என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியா அதிகமான தொழில் முனைவோர் ஆற்றலை கொண்டு உள்ளது. நாம் வேலை தேடுவோர் நாடாக இல்லாமல், வேலையை உருவாக்கும் தேசத்தினராக உருவாகவேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மாநாட்டில் நடுவண்நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஆர்.பி.ஐ. கவர்னர் ரகுராம் ராஜன், நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சிங்கா மற்றும் மூத்த பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நடுவண் அரசு தேவையில்லாத வீண்செலவுகளைப் பெருமளவு குறைத்து உள்ளது. நடுவண் அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்களின் மூலம், நாட்டில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சுகாதார குறைபாடு மற்றும் சுற்றுசூழல் தூய்மையின்மை நாட்டில் மிகப் பெரிய சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் வேளாண்துறையிலும் சீர்திருத்தங்களை கொண்டு வருவது அவசியம் ஆகும் என்று பிரதமர் மோடி கூறினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.