Show all

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை ஆளுநர் ஆட்சியா? மோடியின் தந்திரம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடத்துவதற்கு, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மோடி. 

02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடி தலைமையிலான, நடுவண் அரசு, இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், நாடாளுமன்ற  முதல் கூட்டத் தொடர், இன்று தொடங்கி, நாற்பது நாட்கள் நடைபெறவுள்ளது. அதை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக, நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. 

இதில் பேசிய மோடி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடத்துவதற்கு, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், என, வலியுறுத்தினார். 

இந்த அடிப்படையில் பார்த்தால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை- நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்று பற்பல ஆண்டுகள் நடுவண் அரசின் நேரடி நிருவாகத்தில் ஆளுநர் ஆட்சி நடத்தப் படும்.

டில்லியில், மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், நடுவண் அமைச்சர்கள், முதன்மைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில், பிரதமர் மோடி பேசியதாவது:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பல புது முகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, நாடாளுமன்றக் கூட்டத் தொடர், புத்துணர்ச்சியுடனும், புதிய சிந்தனைகளுடனும் தொடங்கும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. 

கடந்தமுறை- கூச்சல், குழப்பம், அமளிகளால், நாடாளுமன்றக் கூட்டத் தொடர், கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த முறை, அதுபோன்ற பிரச்னைகள் இல்லாமல், கூட்டத் தொடரை, சுமுகமாக நடத்தி முடிக்க, அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். 

தற்போது, நம் நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தல்களும், தனித் தனியாக நடத்தப்படுகின்றன. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற நடைமுறைக்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க முடியும் இவ்வாறு மோடி பேசினார்.

பாஜக கொண்டு வந்த முத்தலாக் தடை சட்ட மசோதா, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, பெண்களுக்கு ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, குடியுரிமை சட்ட சீர்திருத்த மசோதா உள்ளிட்டவை, நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இது தவிர, ஆதார் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட, பல புதிய மசோதாக்களும், இந்த கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவற்றை, இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற, பாஜக மோடி அரசு, தீவிரம் காட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டு மொத்த இந்தியாவையும் பாஜக ஆட்சியின் கீழ் கொண்டு வரும் முயற்சிக்கான தந்திரம் தாம் இந்த ஒரே சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தல்- சட்டமன்றத் தேர்தல் நடத்தும் உபாயம் என்பதை எதிர்க்கட்சியினர் புரிந்தே வைத்திருக்கின்றனர். 

பாஜகவின்- ‘ஒரே சமயத்தில் நாடாளுமன்றத் தேர்தல்- சட்டமன்றத் தேர்தல்’ யுக்தி வெற்றி பெறுமானால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை- நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்று பற்பல ஆண்டுகள் நடுவண் அரசின் நேரடி நிருவாகத்தில் ஆளுநர் ஆட்சி நடத்தப் படும். அதாவது ஒட்டு மொத்த இந்தியாவும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே, படிப்படியாக பாஜக கட்டுப்பாட்டிற்கு வந்து விடும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,186.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.