Show all

நாடே அல்லோகல்லோலப்படும் இன்ப அதிர்ச்சி செய்தி! ஒன்றிய பாஜக அரசு என்ன சொல்லுகிறது இது குறித்து

நாட்டு மக்களுக்கு மாதத்திற்கு ரூ.3,800 ஒன்றிய பாஜக அரசு கொடுக்கிறது என்ற தகவல் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசால் நடத்தப்படும் இதழியல் தகவல் அலுவலகம் (PIB) தனது கீச்சில் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிப்பது என்ன?

15,தை,தமிழ்த்தொடராண்டு-5122: நாட்டு மக்களுக்கு மாதத்திற்கு ரூ.3,800 ஒன்றிய பாஜக அரசு கொடுக்கிறது என்ற தகவல் சமுக வலைதளங்களில் பரவி வருகிறது

இந்தியத் தலைமைஅமைச்சரின் வேலையில்லாதவர்கள் கொடுப்பனவுத் திட்டத்தின் (Prime Minister Unemployed Allowance scheme) கீழ் 18 அகவை முதல் 50 அகவை உடையவர்களுக்கு மாதம் தலா ரூ.3,800 ஒன்றிய பாஜக அரசு வழங்குகிறது என்ற தகவல் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து ஒன்றிய பாஜக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நுண்நச்சு தடுப்பு நடவடிக்கையாக மாதக் கணக்கில் நடைமுறையில் இருந்த பொது முடக்கத்தால் பொது மக்களின் பொருளாதாரம், வாழ்வாதரம் உள்ளிட்டவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரம் முடக்கப்பட்டதால் நாடு முழுவதும் எழைகளும், நடுத்தர வர்க்க மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நெருக்கடியில் இருக்கிறார்கள்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அந்தந்த நாட்டின் அரசுகள் வழங்கி வருகின்றன. அந்த வகையில், நமது ஒன்றிய பாஜக அரசும் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரி தங்களால் இயன்ற பண உதவிகளை செய்ய வேண்டுகோள் விடுத்ததுடன், இதற்காக தனி நிதியம் (PM Cares Fund) ஒன்றை அமைத்தனர். 

இந்த நிலையில், தலைமைஅமைச்சரின் வேலையில்லாதவர்கள் கொடுப்பனவுத் திட்டத்தின் (Prime Minister Unemployed Allowance scheme) கீழ் 18 அகவை முதல் 50 அகவை உடையவர்களுக்கு மாதம் தலா ரூ.3,800 ஒன்றிய பாஜக அரசு வழங்குகிறது என்ற தகவல் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி, 18-25 அகவை உடையவர்களுக்கு ரூ.1500, 26-30 அகவை உடையவர்களுக்கு ரூ.2000, 31-35 அகவை உடையவர்களுக்கு ரூ.3000, 36-45 அகவை உடையவர்களுக்கு ரூ.3500, 46-50 அகவை உடையவர்களுக்கு ரூ.3800 வழங்கப்படும் என்றும், அதனை பெற வேண்டும் என்றால் இந்த இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும் என்று ஒரு ஒரு இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு முன்னரும் கடந்த ஆண்டில் (Pradhanmantri Berozgaar Bhatta Yojana) திட்டத்தின் கீழ், வேலையில்லாத அனைவருக்கும் ரூ.3,500 வழங்கப்படும் என்ற தகவல் பரவியது. இந்த சூழலில் தற்போதும் அதே மாதிரியான தகவல் பரவி வருவதால், இதுகுறித்து ஒன்றிய பாஜக அரசு சார்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒன்றிய அரசால் நடத்தப்படும் இதழியல் தகவல் அலுவலகம் (PIB) தனது கீச்சில் வெளியிட்டுள்ள தகவலில், மாதம் தலா ரூ.3,800 ஒன்றிய அரசு வழங்குகிறது என்ற தகவல் போலியானது என தெரிவித்துள்ளது.

மேலும், ஒன்றிய அரசால், தலைமைஅமைச்சரின் வேலையில்லாதவர்கள் கொடுப்பனவு என்ற ஒரு திட்டம் (Prime Minister Unemployed Allowance scheme)  என்ற திட்டமெல்லாம் செயல்படுத்தப்படவே இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.