Show all

இந்தியப் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது! பிரமோஸ் ஏவுகணை குழுவிலிருந்த ஐஎஸ்ஐ உளவாளி சிக்கினான்

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  பிரமோஸ் என்பது சிறு இறக்கையுடன் கூடிய குறைந்த உயரத்தில் பறக்கவல்ல ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பல், கப்பல், போர் விமானம் மற்றும் தரைவழி போன்ற பல விதமான வழி முறைகளில் ஏவப்படக்கூடியது. இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும், ரஷ்யாவின் ஒரு பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும். இதன் பெயர் பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா என்ற ஆறுகளின் பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ஏவுகணை உலகின் அதி வேகமாகச் செல்லக்கூடிய ஏவுகணை ஆகும். 

இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை கொள்ளையடிப்பதற்காக பிரமோஸ் குழுவிலிருந்த ஐஎஸ்ஐ உளவாளி இந்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டு இருக்கிறான். இந்த உளவாளி இங்கு நான்கு ஆண்டுகளாக பணியாற்றியதாக கூறப்படுகிறது. சில முதன்மை விவரங்களை கடந்த சில நாட்களாக அவன் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவன் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இயங்கி வந்த பிரமோஸ் குழுவில் பணியாற்றி வந்துள்ளான். இவன் ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


 
தற்போது இவனை பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பிரமோஸ் குழுவிலேயே இப்படி இரு உளவாளி இருந்தது இந்திய பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.

நிஷாந்த் அகர்வால் என்று இவன் தன்னுடைய பெயரை அளித்துள்ளான். அதேபோல் மஹாராஷ்டிராவை சேர்ந்தவன் என்று தன்னுடைய விவரங்களை அளித்து இருக்கிறான். இவன் படித்த கல்லூரி, ஊர், விவரம் என அனைத்தும் பொய்யானவை என்ற கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இவன் நான்கு ஆண்டுகளாக பிரமோஸ் குழுவில் பணியாற்றி உள்ளான். மூத்த பொறியாளராக இவன் பணியாற்றியதாக கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக சிறிய சிறிய விசயங்களை கூட இவன் தனது உளவு படையான ஐஎஸ்ஐக்கு அனுப்பி உள்ளான்.

முதன்மையான தகவல்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு பிரமோஸ் மஹாராஷ்டிரா யூனிட்டில் இருந்து கசிகிறது என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்துள்ளது. இதையடுத்து நடந்த மறைமுக கண்காணிப்பில், இவன்தான் அந்த உளவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,934.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.