Show all

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு! சுங்கச் சாவடிகளை அப்புறப் படுத்தி, சாலைகளை சீரமைத்தாலே தீர்வு

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் வணிக பற்றாக்குறையானது  மோடி அரசு பதவியேற்ற கடந்த ஐந்து ஆண்;டுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக இந்த ஆண்டு கடந்த மாதம் 16.6 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

காரணம் என்னவெனில் டாலர் மதிப்பு வலுவாகிக் கொண்டே செல்கிறது. அதாவது அமெரிக்காவின் பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறது.

இந்நிலை நீடிக்கும்பட்சத்தில் ரூபாயின் இயக்கத்தை மென்மையாக்குவதற்கு ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி நடவடிக்கையை எடுக்கக்கூடும்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான தலையாய காரணம் இந்தியாவில் எண்ணெய் இறக்குமதி அளவு. இந்தியா தனது தேவைக்கான எண்ணெய் அளவில் சுமார் 80 விழுக்காடு இறக்குமதி செய்கிறது. உலகில் அதிகளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இந்தியா எண்ணெய்க்கு கொடுக்கும் விலையானது அதிகரித்துள்ளது. இரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தபிறகு, இத்தடையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமா என்ற கவலையால் சர்வதேச எண்ணெய் விலை அதிகரித்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக ரூபாய் வீழ்ச்சியடைந்தால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். அயல்நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி என்பது கெட்ட செய்தியாகும்.

இந்திய ஏற்றுமதியைத் தரப்படுத்துதல், ஏற்றுமதிகளை ஊக்குவித்தல், இந்தியச் சாலைகளை சீரமைத்து, எரிபொருள் தேவைகளை குறைத்தல் போன்றவைகளால் மட்டுமே இந்திய பணமதிப்பை உயர்த்துவதற்கான வழியாகும்.

சுங்கச் சாவடிகளை முழுமையாக அப்புறப் படுத்தி, இந்தியச் சாலைகளை சீரமைத்தாலே எரிபொருள் தேவையை ஐம்பது விழுக்காடு குறைத்து, எரிபொருள் இறக்குமதியை ஐம்பது விழுக்காடு குறைக்க முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜக சுங்கச் சாவடிகளை முழுமையாக அப்புறப் படுத்தி சாதிக்குமா என்ன? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,879.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.