Show all

தென் இந்திய நடிகைகளிலேயே மிகவும் சுறுசுறுப்பாக வலம் வரும் நயன்தாரா

28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென் இந்திய நடிகைகளிலேயே மிகவும் சுறுசுறுப்பாக வலம் வருபவர் நயன்தாரா. ஒரு பக்கம் கதைத்தலைவர்களுக்கு இணை வேடத்தில், இன்னொரு பக்கம் கதைத்தலைவிக்கு தலையாயத்துவம் உள்ள வேடத்தில் என கலக்கி வருகிறார். 

அடுத்து அவர் நடிக்க இருக்கும் பேய் படத்துக்கான அரங்க வேலைகள் சென்னையில் சென்றுகொண்டிருக்க இப்போது சிரஞ்சீவியுடன் ஐதாராபாத் திரைப்பட நகரில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். 

இதே இடத்தில் தான் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பும் சென்றுகொண்டிருக்கிறது. இது நயன்தாராவுக்கு வசதியாக போய்விட்டது. இரண்டு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். அவரது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து இளம் நடிகைகள் வியக்கின்றனர். 

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் 'கோலமாவு கோகிலா' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,878.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.