Show all

இந்தியத் தலைமை அமைச்சருக்கு, கூடுதல் வசதியுள்ள வேறு புதிய தனி விமானம் வாங்க முடிவு

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியத் தலைமை அமைச்சருக்கென சொந்தமான தனி விமானம் ஒதுக்க நடுவண் அரசு முடிவு செய்து இருக்கிறது. அதேபோல் இந்திய குடியரசு தலைவர், மற்றும் துணை குடியரசுத்தலைவர் ஆகியோருக்கும் தனியாக விமானம் வாங்கப்படுகிறது. 

ஏற்கனவே இவர்கள் மூவருக்கும் தனி விமானம் இருக்கிறது. ஆனால் இப்போது கூடுதல் வசதிகளுடன் புதிய விமானம் வாங்கப்பட உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இந்த விமானம் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 

இப்போதுவரை போயிங் 747 விமானம் மோடியால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானம் நிறைய தொழில்நுட்பங்களை கொண்டது எனினும், அமெரிக்க போன்ற தொலைதூர நாடுகளுக்கு செல்லும் போது இடையில் இறக்கி எரிபொருள் நிரப்ப வேண்டும். இதனால் தற்போது போயிங் 777-300 விமானம் வாங்கப்பட இருக்கிறது. மொத்தம் மூன்று விமானம் வாங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஒரு விமானத்தின் விலை 4,300 கோடி வரை ஆகும் என்று கூறப்படுகிறது. மொத்தம் மூன்று விமானத்திற்கு 12,900 கோடி செலவு ஆகும். பராமரிப்பிற்கு தனியாக செலவு ஆகும். 

மேலும் அணு ஆயுத தாக்குதலை தாங்கும் வகையில் இந்த விமானத்தில் பாதுகாப்பு உபகரணம் பொருத்த அமெரிக்காவிடம் உதவி கேட்கப்படுகிறது.

நல்லவாயன் சம்பாதிச்;சு நாரவாயன் தின்ன கதையாக என்று ஒரு பழமொழி உண்டு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,725.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.