Show all

இந்தியாவில் மிகப்பெரும் பணக்காரர்களும், இந்தியாவின் மிகப்பெரும் ஏழைகளும்

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை பார்க்ளேஸ் ஹூருன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. 

பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைத்த வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், இந்தியாவின் நிலை எனும் தலைப்பில் இந்தியாவின் மிக ஏழைகள் நிலை குறித்து கூறப்பட்டுள்ளது.

ரூ.3710000000000 சொத்துக்களுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 3000000000 ரூபாய் வரை முகேஷ் அம்பானி சம்பாதித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 
ரூ.1590000000000 யுடன்ஹிந்துஜா குழுமம் இரண்டாவது இடத்திலும்,
ரூ.1150000000000 யுடன் எல்.என். மிட்டல் குடும்பம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 
இந்தியாவில் 10000000000 ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் உடையவர்கள் எண்ணிக்கை 831 ஆக உள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ள 831 பேரின் மொத்த சொத்து மதிப்பு -  52000000000000 ரூபாயாகும்.
அமெரிக்கா, சீனாவிற்கு பிறகு பெரும் பணக்காரர்கள் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது.
நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது என்று நடுவண் அரசு கூறி வருவது உண்மைதான் ஆனால், நாட்டின் பொருளாதாரம் வெறுமனே ஆயிரம் பேர்களிடம் மட்டுமே வளர்ந்துவருகிறது. அவர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.

92 விழுக்காடு ஆண் தொழிலாளர்கள், 82 விழுக்காடு பெண் தொழிலாளர்கள் இன்னும் மாதத்துக்கு ரூ.10 ஆயிரத்துக்குள்ளேயே ஊதியம் பெறுகிறார்கள். இவ்வாறு இந்தியாவின் ஏழைகள் குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,923.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.