Show all

இந்தியாவுக்குத் தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாக உள்ளது: விஞ்ஞானி மயில்சாமிஅண்ணாதுரை

இந்தியாவுக்குத் தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாக உள்ளது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

 

திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது:

 

இளைஞர்கள் தங்களது முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளைத் தாங்களே தேர்ந்தெடுக்க வேண்டும். வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதோடு, அதை முந்திப் பிடிக்கவும் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியாளராக வர முடியும்.

 

பூமியில் இருந்து பல ஆயிரம் கி.மீ. தூரம் உள்ள செவ்வாய்கிரகத்துக்கு பல நாடுகள் விண்கலம் அனுப்பியது. அதில் பல தவறுகள் நிகழ்ந்தன. ஆனால், இந்தியா வெற்றிகரமாக விண்கலம் அனுப்பியது. நமது நாட்டில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. வேலை இல்லை என்பதை விட, வேலைக்கு சரியான ஆள் இல்லை என்பதுதான் உண்மை. முதன்மையானவனாக இருக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன், தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

 

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போதைய சூழலில் நமது நாட்டில் தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாக இருப்பதால், வரும் நாள்களில் மாதம் ஒரு செயற்கைக்கோள் என்ற வகையில் விண்ணுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறோம். விண்ணில் செலுத்தப்பட்டுள்ள மங்கள்யானின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன என்றார்.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.