Show all

இந்தியா ஹிந்துநாடா? கமல் தொடங்கிய விவாதம் சூடு பிடிக்கிறது

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமலுக்கு ஹிந்து மகா சபை தலைவர் விடுத்துள்ள கொலை மிரட்டலுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹிந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என ஹிந்து மகா சபாவின் துணைத் தலைவர் அசோக் சர்மா எச்சரித்துள்ளார்.

ஹிந்து மத உணர்வுகளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு இந்த புனித பூமியில் வாழ உரிமையில்லை என அவர் கூறியுள்ளார். அசோக் சர்மாவின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பினராயி விஜயன் கீச்சுவில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் மதவெறி கொண்டு அச்சுறுத்தும் இது போன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தி, பன்சாரி, தபோல்கர், கல்புர்கி, கவுரி லங்கேஷூக்கு என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பது இந்த தேசத்திற்கே தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர், அந்த பட்டியலில் வேறு பெயர்கள் இணையாமல் இருக்க இது போன்று மிரட்டல் விடுப்பவர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார். மதத்தின் பெயரால் சமூகத்திலும், நாட்டிலும் அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையை கண்டிப்பதாக கூறியுள்ளார்.

முன்னதாக வாரஇதழ் ஒன்றில் கடந்த சில வாரங்களாக கமல்ஹாசன் தொடர் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறார். அவ்வார இதழில்கேள்வி ஒன்றிற்கு பதிலளித்துள்ள கமல்,

எங்கே ஓர் ஹிந்து தீவிர வாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை, ஹிந்துத்துவ சக்திகளால் விட முடியாத அளவுக்கு, அவர்கள் கூட்டத்திலும், தீவிரவாதம் பரவி இருக்கிறது என பதிலளித்திருந்தார்.

இதனால் கமலுக்கு எதிராக பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக அசோக் சர்மா கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

-மத்திய ஆசியாவிலிருந்து நாடோடிகளாக வட இந்தியாவில் குடியேறிய ஆரியர்களின் வேதகாலத்திற்குப் பிறகு துருக்கியர்கள் படையெடுத்து வந்து, வட இந்தியாவை கலக்கு கலக்கு என்று கலக்கியதால்-

ஆரியர்களிடம் எழுந்த இஸ்லாம் மதத்திற்கு எதிரான எழுச்சிக்கு ஹிந்துத்துவா என்று பெயரிட்டவர்களும்,

உருவான புதிய மொழிக்கு ஹிந்தி என்று பெயரிட்டவர்களும் துருக்கியர்களே.

உருதுமொழியில் இருந்து உருவான மொழிதான் நம் நாட்டில் அலுவல் மொழியெனச் சொல்லப்படும் ஹிந்தி, ‘ல்ல்லு ஜிலால்’ என்பவர் உருது மொழியில் இருந்து ஒரு கிளையாகப் பிரித்துப் புதிய மொழி ஒன்றை உருவாக்கினார். மேலும் அந்த மொழியில் இருந்த அரபி மற்றும் பாரசீக மொழி சொற்களை நீக்கி அதற்கு பதில் சம்ஸ்கிருத சொற்களை இணைத்து ஹிந்தி எனும் புதிய மொழியொன்றை தோற்றுவித்தார். இதனால் ஹிந்திக்கும் அப்பகுதிகளில் பேசப்பட்டு வந்த சிதைவான பிராகிருத மொழிக்கும் மிகுந்த வேறுபாடு உண்டானது. வடமொழிச்சொற்களைச் சேர்த்துக்கொணடதால் ஹிந்தி வடமொழியில் இருந்து உருவானது என்று சிலர் இங்குப் பரப்புரை செய்துவருகின்றனர்.

ஹிந்தி எனும் மொழி உருது, பாரசீகம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் சிதைவான கலப்பு மொழி. உண்மையில் ஹிந்தி என்பது நம் நாட்டு மொழியே இல்லை. அரேபிய மொழியாலும், பாரசீக மொழியாலும் உயிர் பெற்ற மொழி.

  • இதனுடைய அகவை வெறும் 830 ஆண்டுகள் தான். மொகலாய மன்னர்கள் உருவாக்கிய உருது மொழியில் இருந்து பிரிந்து உருவாகிய ஹிந்தி, மொகலாய மொழி தான். மேலும் உருதுக்கும் ஹிந்தி மொழிக்கும் பெரிய அளவில் வேறுபாடு கிடையாது, கிட்டத்தட்ட இரண்டும் ஒன்று தான். இரு மொழிகளுக்கும் ஒரேயொரு வேறுபாடு உண்டு, அதாவது ஹிந்தியில் எழுத பயன்படுத்தப்படும் எழுத்து முறை ‘தேவநகரி.

உருது மொழியில் எழுத பயன்படுத்தும் எழுத்து முறை அரபிக் மற்றும் பாரசீக எழுத்து முறை.

ஹிந்தியும், உருதும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதால் தான் ஹிந்தி மொழி பாகிஸ்தானில் புரிந்து கொள்ளப் படுகிறது. வளைகுடா நாடுகளில் புரிந்து கொள்ளப் படுகிறது. சவுதியில் புரிந்து கொள்ளப் படுகிறது. ஆப்கானிஸ்தானில் புரிந்து கொள்ளப் படுகிறது. என வட இந்தியர்கள் பெருமை பேசிக்கொள்கிறார்கள்.

இவர்களை வட இந்தியர்கள் என்று சொல்வதை காட்டிலும் மட இந்தியர்கள் என்று சொன்னால் சரியாக இருக்கும். இந்த நாடுகளில் உள்ளவர்கள் இசுலாமியர்கள், அவர்களின் மொழி உருது. உருதும் ஹிந்தியும் ஒன்றுபோல் உள்ளதால் அவர்கள் ஹிந்தியைப் புரிந்து கொள்ள முடிகிறது.

உண்மையில் இசுலாமியர்கள் ஹிந்தியை உருது மொழியின் ஒரு கிளையாக பார்ப்பதால், ஹிந்தியும் இசுலாமிய மொழி என்ற உள் எண்ணத்திலும், உருது மொழியின் ஒரு கிளை இந்தியாவை ஆளுகிறது என்று பெருமையிலும் தான் அங்கிகரிக்கின்றனர். மற்றபடி இந்த ஹிந்தி மொழி சுவை கண்டு, வியந்து பேசப்படுவதில்லை. வளைகுடா நாடுகளில் ஹிந்தியை இந்தியாவின் வடமாநிலங்களில் இருந்து பணிக்கு வரும் வேலையாட்களை வேலை வாங்கவே பெரிதும் பேசப்படுகிறது.

ஹிந்தி வடநாட்டில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி என்பதெல்லாம் முழுக்க பொய். இம்மொழி வடநாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் வெவேறு மாறுதல்களுடன் வெவ்வேறு மொழிப் பெயர்களைக் கொண்டு பேசப்படுகின்றது. ஒரு பகுதியில் பேசப்படும் ஹிந்தியை மற்ற பகுதியில் உள்ளவர்கள் எளிதாக புரிந்துகொள்ளமுடியாது. இவ்வாறு பல்வேறு மாறுதல்களுடன் பலவாறு பேசப்படும் ஹிந்தியை மொழியியல் அறிஞர்கள் ஆய்வு செய்து பார்த்ததில், ஹிந்தி ஐந்து பிரிவுகளாகப் பேசப்படுவது தெரியவருகிறது.

அதாவது மேல்நாட்டு இந்தி, கீழ்நாட்டு இந்தி, பிகாரி, ராஜஸ்தானி, பகரி எனப் பிரிக்கின்றனர். மேலும் ஒவ்வொரு பிரிவில் பல உட்பிரிவுகள் உள்ளன.

ஆம் ஹிந்தி என்பது தமிழைப் போன்று இயற்கையாக உருவான மொழியில்லை, செயற்கையாக உருவாக்கப்பட்ட சிக்கல் மொழி. இவ்வாறு பல மொழிகளை ஹிந்தி எனும் குடையின் கீழ் கொண்டுவந்து, மற்ற மொழி பேசுபவர்களையும் ஹிந்தி பேசுபவர்கள் என கணக்கு காண்பிக்கிறது நம் இந்தியாவை நேற்று ஆண்ட காங்கிரஸ், இன்று ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசுகள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.