Show all

இன்று விடுதலைநாள்!

இந்தியாவிற்கு கிடைத்த இந்த விடுதலையால், கடந்த எழுபத்தி நான்கு ஆண்டுகளில் கடைசி பாமரன் வரை அடைந்த பயன் என்ன என்று ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் சிந்திக்க வேண்டிய நாள் ஆகும். 

30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பிரித்தானியரிடமிருந்து இந்தியாவிற்குக் கிடைத்த விடுதலையின் எழுபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்து எழுபத்தியாறாவது ஆண்டில் இன்று காலடி எடுத்து வைக்கிறோம். 

இந்தியாவிற்கு கிடைத்த இந்த விடுதலையால், கடந்த எழுபத்தி நான்கு ஆண்டுகளில் கடைசி பாமரன் வரை அடைந்த பயன் என்ன என்று ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் சிந்திக்க வேண்டிய நாள் ஆகும். 

இந்தியா தமிழ் உள்ளிட்ட இருபத்தியிரண்டு மொழி பேசும் மக்களின் நாடும் அதற்கான சட்ட நிருவாகமும் முன்னெடுக்க வேண்டிய நாடும் ஆகும்.  

இந்த வகைக்கு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவின் அதிகார மொழிகள் என்று அரசியல் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்;த மொழிகளின் ஆளுமைக்கு எந்த கட்டுமானங்களும் இதுவரை முன்னெடுக்கப் படாமலே இருக்கிறது. 

இந்த 22மொழியினருக்கும் ஆங்கிலம் அன்னியமான மொழி. இந்த 22மொழிகளில் ஒன்றான ஹிந்தி மீதமுள்ள 21 மொழியினருக்கும் ஆங்கிலம் போலவே அன்னியமான மொழியாகும். ஆனால் ஒன்றிய ஆட்சி கடந்த எழுபத்தி நான்கு ஆண்டுகளாகவே ஹிந்தி மொழியினர்களுக்கு மட்டுமே அதிகாரம் உடையதாக இருக்கிறது. மனசாட்சி கொஞ்சமும் இல்லாமல் மற்ற மொழியினர் மீது ஹிந்தியைத் திணித்தும் வருகின்றார். கொஞ்சமும் நியாயம் இல்லாமல் இருபத்தியோரு மொழியினர் செலுத்தும் வரிப்பணத்தில் ஹிந்தி மொழியை வளர்த்தும் வருகின்றனர். 

நாடு, சட்டம், ஆட்சி, அதிகாரம், மக்களாட்சி, விடுதலை என்று எந்த தலைப்பிலும் வராத கூகுள் என்கிற வணிக நிறுவனம் 120 க்கு மேலான உலக மொழிகளில் கூகுள் தேடல் அதிகாரத்தை வழங்கி வணிக நேர்மை பேணி வருகிறது. ஒன்றிய ஆட்சியில் தொடரும் ஹிந்தி மொழியினர் தங்கள் மொழிக்கு மட்டும் அதிகாரம் முன்னெடுக்கும் நேர்மையின்மையில் தொடர்ந்து உறுதி காட்டி வருகின்;றனர்.

விடுதலை கொண்டாட்ட நாளில், அட்டவணை எட்டின் தமிழ் உள்ளிட்ட இருபத்தி இரண்டு மொழிகளுக்கு தனித்தனி அமைச்சகம் தொடங்கப்படும் என்றால் அது விடுதலையைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல நடவடிக்கை என்று மகிழ்ந்திட முடியும். 

ஆட்சி அதிகாரத்தில் இனி இருபத்தியிரண்டு மொழி மாநிலத்தவர்களுக்கும் பங்கு என்கிற அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு இரண்டு அமைச்சர்கள் என்று தெரிவித்தால் அது அது விடுதலையைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல நடவடிக்கை என்று மகிழ்ந்திட முடியும். 

நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் இந்தியக்கொடி ஏற்றி கொண்டாடுங்கள் என்பது- மக்களுக்கு விதிக்கிற ஒருவகையான புதிய நிர்பந்தம் அல்லவா ஆகும். இதை எப்படி விடுதலையைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல நடவடிக்கை என்று மகிழ்ந்திட முடியும். 

இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்து, இன்று வரையில் என மூன்று நாட்கள் இல்லங்கள் தோறும் இந்தியக்கொடியை ஏற்றியும், காட்சிப்படுத்தியும், இதை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் என்றும் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

பாஜக கட்சியினரும், அதிகாரிகளின் தொடர்பில் இருக்கிற தொழில் வணிக நிறுவனங்களும் மட்டுமே, இந்தியக்கொடிகளை ஏற்றி உள்ளனர். இதனால் இது விடுதலையைக் கொண்டாடுகிற நடவடிக்கையாகத் தெரியவில்லை. 

இனிவரும் ஆண்டுகளிலாவது, விடுதலையைப் பகிர்ந்து கொள்ளும் நல்ல நடவடிக்கை என்று மக்கள் மகிழ்ந்திடும் வகைக்கு- விடுதலை நாளில் நல்ல, நேர்மையான அறிவிப்புகளை முன்னெடுக்க ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இன்றைய விடுதலை நாளில் சிந்தித்திருக்க அன்போடும், உரிமையோடும் வேண்டுகிறோம். 
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,341.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.