Show all

எவ்வாறான வகையில் நடக்கும்? கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எடியூரப்பா அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில்; எப்படி நடைபெற உள்ளது என்பது குறித்து கர்நாடக சட்டசபை செயலாளர் மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த நம்பிக்கை தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் சொல்வார். அப்போது, ஆதரவு தெரிவித்து எழுந்து நிற்பவர்களின் ஒவ்வொருவரின் பெயரும் எழுதி கொள்ளப்படும். அதன் பிறகு தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று பேரவைத்தலைவர் கூறுவார்.

அப்போது எழுந்து நிற்பவர்களின் பெயர்கள் எழுதிக் கொள்ளப்படும்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்ற அரங்கு கதவுகள் மூடப்படும். மூடப்பட்ட பிறகு உள்ளே வரவோ, உள்ளேயிருந்து வெளியே செல்லவோ யாருக்கும் அனுமதி கிடையாது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், அதன்படி எண்ணிக்கை கூட்டப்படும். இவ்வாறு மூர்த்தி கூறினார்.

குரல் வாக்கெடுப்பு மூலமும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம். ஆனால், இது தலையாயத்துவமான விவகாரம் என்பதால் குழப்பத்தை தவிர்க்க தலைகளை எண்ணி வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,792. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.