Show all

மாணவன் வெறிச்செயல்! அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர்கள், பெரும்பாலானோர் மாணவர்கள் உயிரிழப்பு

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் டெக்சாஸ் நகரில் சான்டா பே உயர்நிலைப்பள்ளியில், ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்து, தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

இந்த சம்பவத்தில் 10 பேர்கள், பெரும்பாலானோர் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். ஒரு காவல்துறை அதிகாரியும் சுடப்பட்டதாக தெரிகிறது.

இந்தத் துப்பாக்கி சூட்டை நடத்தியவன், பள்ளி மாணவன் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அவனை காவல்துறையினர் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அமெரிக்க குடிஅரசு தலைவர் டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

அமெரிக்காவில் அண்மைகாலமாக பள்ளிக்கூடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் நடந்த 3வது சம்பவம் இதுவாகும்.

புளோரிடாவில் ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியானார்கள். என்பது குறிப்பிடத் தக்கது. 

குடும்பத்தில் தனது பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள வாய்ப்பின்மையே இதற்கான காரணமாக இருக்க முடியும். இப்படியிருக்க, நமது தமிழகத்தில்,  பத்தாயிரம் ஆண்டுகளாக செழுமையாக கட்டமைக்கப் பட்ட நமது குடும்ப அமைப்பு முறையைச் சிதைப்பதற்கு, தமிழக அரசு நடத்தும் சாராயக் கடைகளும், நடுவண் அரசு நடத்தும் வாழ்மான அடிப்படைகளை தகர்க்கும் திட்டங்களும், தேர்வுகளும், குடும்பத்தை வறுமைக்குள்ளாக்கி குடும்ப அமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,792.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.