Show all

மொத்தமே14135 பேரால் மட்டுமே பேச முடிந்த, சமஸ்கிருதத்தை பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டுமாம்

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பள்ளிக்கூடங்களில் சமஸ்கிருதத்தை, தாய்மொழியோடு சேர்த்து கட்டாயப் பாடமாக நடத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் இந்தியத் தொழில்துறை அமைப்பின் 8-வது மாநாடு இன்று நடந்தது. இதில் வளர்ந்து வரும் உலகில் இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பேசியதாவது:

என்னைப் பொறுத்தவரை அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் தாய்மொழியோடு சேர்த்து, சமஸ்கிருத பாடத்தையும் கட்டாயமாக்க வேண்டும். 3-வது பாடமாக மாணவர்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துப் படித்துக்கொள்ளலாம். 

சிலருக்கு பல்வேறு பிரிவுகளில் திறன்பெற்ற அறிவு இருக்கும். உதாரணமாக, கணிதம், அறிவியல், மருத்துவம், அறுவைசிகிச்சை போன்றவற்றில் நாம் வல்லுநர்களாக இருந்தவர்கள்தான். ஒரு விமானத்தை எப்படி உருவாக்குவது என்றுகூடக் கையேடு வைத்திருந்தோம். ஆனால், பிற்காலத்தில் இதைப் படிக்கும் போது அது நிலையாக இருக்க வேண்டும். அதற்காகவே இப்போது மொழிமாற்றம் செய்யப்பட்டுவருகிறது.

யோகா, தியானத்தின் நற்பலனை மேற்கத்திய நாடுகள் உணரத்தொடங்கி, ஏற்கத்தொடங்கிவிட்டார்கள். ஆனால், நம்நாட்டின் வரலாறு பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் வரலாற்றுப் புத்தகங்களில் முறையாக, தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வருவதற்காக சில அறிஞர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். அறிவியல் ஆதாரங்களுடன் உண்மையான வரலாற்றைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம். அதற்குச் சிறிது காலம் தேவைப்படும் இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா? உலகம் முழுவதும் சம்ஸ்கிருதம் பேசத் தெரிந்தவர்கள் வெறுமனே 14135 பேர்கள் மட்டுமேதானாம். இந்திய அரசின் கணக்கெடுப்பில் தெரிவிக்கப் பட்ட தகவல்தாம் இது. நம்ப சுப்பரமணியசாமிக்கும் சமஸ்கிருதம் பேசத்தெரியாது. 

ஹிந்தி தெரிந்தவர்கள் சமஸ்கிருதத்தைப் படிக்கலாம். சமஸ்கிருத தேவநாகரி எழுத்தைதாம் ஹிந்தி எடுத்துக் கொண்டது. சம்ஸ்கிருதத்தை ஹிந்தி தெரிந்தவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தமிழ் தெரிந்தவர்கள் சமஸ்கிருதப் பேச்சை பத்து விழுக்காடு புரிந்து கொள்ள முடியும் ஏனென்றால் பத்து விழுக்காடு தமிழ்ச் சொற்களை சமஸ்கிருதம் எடுத்துக் கொண்டது. அந்த வகையில் சுப்பரமணியசாமிக்கு தமிழ் தெரியும் என்பதால் பத்து விழுக்காடு சமஸ்கிருதம் பேசினால் அவருக்கு புரிந்து கொள்ள முடியும். ஆனால், மோடி அமித்ஷா, ராகுல்காந்தி ஆகியோர்களால் ஒரு விழுக்காடு கூட சமஸ்கிருதம் பேசினால் புரிந்து கொள்ள முடியாது. 

ஆனால் முகமதிய மக்களை முழுக்க முழுக்க எதிர்க்கும் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் உருது அறுபது விழுக்காடு புரியும். ஏனென்றால் ஹிந்தி அறுபது விழுக்காடு உருது மொழியை எடுத்துக் கொண்டுள்ளது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,784. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.