Show all

இலங்கையின் வடமாகாண அவை தீர்மானம் நிறைவேற்றம்! மே-18ம் நாள் தமிழ்இன அழிப்பு நாளாக அறிவிப்பு

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகின் பனிரெண்டு நாடுகளின் ஒத்துழைப்போடு, தனித்தமிழ்ஈழம் கோரி போராடி வந்த போராளிகள் முற்றாக அழிக்கப் பட்டனர். அந்த நாள் ஞாயிற்றுக் கிழமை, 03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு 5111ல் (17மே2009) தொடர்ந்த, அடுத்த ஆண்டிலிருந்து திருமுருகன் காந்தி அவர்கள், மே17 இயக்கம் தொடங்கி தமிழர்க் கடற்கரையென்றும் சல்லிகட்டு கடற்கரையென்றும் அழைக்கப் படுகிற மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.  

இலங்கையின் வடமாகாண அவையின் 122-வது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.  இதன்போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மே 18-ம் தேதியை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்யும்படி அவையில் முன்மொழிந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ம் நாள் முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதலில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விட்டனர். எனவே, மே 18-ம் தேதியினை இன அழிப்பு நாளாக பிரகடனம் செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை உலக தமிழ் மக்கள் அனைவரும் இன அழிப்பு நாளான மே 18-ம் நாளினை துக்க நாளாக அனுசரிக்க கோர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அமைச்சர் அனந்தி சசிதரன் முன்மொழிந்ததை அவையில் அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டதால், மே 18-ம் நாளினை இனஅழிப்பு நாளாக பிரகடனம் செய்வதாக தீர்மானம் எடுக்கப் படுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அவையில் அறிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,784. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.