Show all

சென்னை நகரில் கிறித்துமஸ் கொண்டாட்டங்களை கைவிடுவது என கிறித்துவ அமைப்புகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை நகரில் கிறத்துமஸ் கொண்டாட்டங்களைக் கைவிடுவது என கிறித்துவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

டிசம்பர் முதல் வாரத்தில் கொட்டி தீர்த்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையில் உள்ள பெரும்பாலான குடியிருப்புகளில் வெள்ளநீர் சுழ்ந்துள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கமாக டிசம்பர் முதல் வாரம் தொடங்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களைக் கைவிடுவது என பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

தென்னிந்திய திருச்சபையின் சென்னைப் பேராயம் சார்பில் அதன் கீழ் உள்ள அனைத்து திருச்சபைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தென்னிந்திய திருச்சபை துணை நிற்கும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு செலவழிக்கப்படும் பணம், வெள்ள நிவாரணப் பணிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். ஏற்கெனவே சென்னை பேராயம் சார்பில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது என அதன் செயலர் சாமுவேல் ஜேக்கப் கூறினார்.

மேலும், சாண்டா கிளாஸ் எனும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடுவீடாக சென்று வாழ்த்துக்களைப் பரிமாறும்,

கேரல் ரவுண்ட் நிகழ்ச்சியை பெரும்பாலான திருச்சபைகள், நிறுவனங்கள் ரத்து செய்துவிட்டன.

கிறிஸ்துமஸ் காலங்களில் வழக்கமாக 600 குடும்பங்களைச் சந்திக்கும் நாங்கள் இந்த ஆண்டு, அதைக் கைவிட முடிவு செய்துள்ளோம் என ஆலந்தூர் லுத்ரன் ஆலயத்தின் செயலர் ஜோப்பியாஸ் அருள் கூறினார்.

கேக் மிக்ஸிங் நிகழ்வுடன் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தொடங்கிய சென்னையின் பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்கள் தற்போது களையிழந்து காணப்படுகின்றன.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.