Show all

இஸ்ரோவுக்கு ரூ. 2லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறை அறிக்கை.

ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் முறைகேடு தொடர்பாக, இஸ்ரோ முன்னாள் தலைவரும் மற்றும் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ராதாகிருஷ்ணனிடம், பெங்களூரு அலுவலகத்தில் நேற்று அக்.22  சிபிஐ விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரோ அனுப்பும் செயற்கை கோள்களில் இருந்து பெறப்படும் அலைவரிசைகள் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. இந்த அலைக்கற்றைகளை வர்த்தக ரீதியாக ஒதுக்கீடு செய்ய இஸ்ரோவால் உருவாக்கப்பட்டது தான் ஆண்ட்ரிக்ஸ் என்ற நிறுவனம். இந்நிலையில் கடந்த 2005 ம் ஆண்டு தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனம் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 70 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை வாங்க ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. 20 ஆண்டுகள் வரை இந்த அலைவரிசையைப் பயன்படுத்திக் கொள்ள ரூ. 1000 கோடி மட்டுமே கட்டணமாக பெறப்பட்டது.

ஆனால் இதே இஸ்ரோ பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். டெலிபோன் நிறுவனங்களுக்கு 20 மெகா ஹெட்ஸ் அலைவரிசைகளை ஒதுக்கியது. இதற்காக ரூ. 12 ஆயிரத்து 847 கோடி கட்டணமாக பெற்றது. ஆனால் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு 70 மெகாஹெட்ஸ் அலை வரிசையை விற்று அதற்கு கட்டணமாக ரூ. 1000 கோடி மட்டுமே பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் விவகாரங்களை நடுவண் பொது கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது. ஆய்வு முடிந்து தணிக்கை துறை அறிக்கையைத் தயாரித்து உள்ளது. அதில் தேவாஸ் நிறுவனத்துக்கு சொற்ப தொகைக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் இஸ்ரோவுக்கு ரூ. 2லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.